உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

இளங்குமரனார் தமிழ் வளம் 17

தூதர் பண்பு துலக்கும் அடக்கம்

773. படையளவு கூறார் 'பெரியார்முன் மாற்றார் படையளவிற் றென்று வியவார் - கொடைவேந்தன் ஈத்ததுகண் டின்புறா ரேந்திழையார் தோள்சேரார் பார்த்திபர்தூ தாயடைந்தார் பண்பு.

மூவகைத் தூதர் யாவரென் றுரைத்தது 774. தானறிந்து கூறுந் தலைமற் றிடையது கோனறைந்த தீதென்று கூறுமால் - தானறியா தோலையே காட்டுங் கடையென் றொருமூன்று மேலையோர் தூதுரைத்த வாறு.

தூதின் கடமை துணிந்து சொற்றது

775. அன்புடைமை யாய்ந்த வறிவுடைமை யிற்பிறப்பு நன்குடைமை நல்ல நயனுடைமை - நன்கமைந்த சுற்ற முடைமை வடிவுடைமை சொல்வன்மை கற்றடங்கல் தூதின் கடன்.

உடன்பிறந் தாரை உருத்து வெகுளேல்

776. கால வெகுளிப் பொறையகேள் நும்பியைச் சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர்

கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா வதுகண்டாய்

நூல்கண்டார்கண்ட நெறி.

-பாரதம்

-தகடூர்யாத்திரை

சூழ்பொருள் அனைத்தும் சூழ்வது தூது

777. ஆதிநூ லமைச்சர்க் கோது

மாண்பெலா மமைந்து நின்றான்

தூதனாச் செல்லிற் செல்லாச்

சூழ்பொரு ளில்லை போலாம்

1. வெறியார்முன்.