உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஏதிலார்க் காவ துண்டோ யின்னன புகுந்த போதிற் கோதிலாக் குணங்கள் தேற்றிக்

கொழித்துரை கொளுத்த லென்றான்.

தூதர் என்னும் துகளிலா எந்திரம்

778. மந்திரக் கிழவர் கண்ணா மக்கடன் றாள்க ளாகச் சுந்தர வயிரத் திண்டோள் தோழராச் செவிக ளொற்றா அந்தர வுணர்வு நூலா வரசெனு முருவு கொண்ட எந்திர மிதற்கு வாயாத் தூதுவ ரியற்றப் பட்டார். உற்றன உற்றன உரைக்கும் ஆற்றல்

779. கற்றவர் கற்றன கருதுங் கட்டுரைக் குற்றன வுற்றன வுரைக்கு மாற்றலான் மற்றவன் மருசியே யவனை நாம்விடச் சுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே.

263

-சூளாமணி 566, 565, 427

ஒளவை ஆற்றிய அருமைத் தூதுரை

780. இவ்வே, பீலீ யணிந்து மாலை சூட்டிக் கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே யவ்வே பகைவர்க் குத்திக் 'கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்

உண்டாயிற் பதங்கொடுத்

தில்லாயி னுடனுண்ணும்

இல்லோ ரொக்கற் றலைவன்

அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே.

இருவர் வெல்லுதல் இயற்கை அன்று

781. இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன் கருஞ்சினை வேம்பின் தெரியலோ னல்லன்

1. கோடுநுனி.

2. மிலைந்தோ.