உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

782.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

நின்ன கண்ணியு மார்மிடைந் தன்றே, நின்னொடு பொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றே ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே இருவீர் வேற லியற்கையு மன்றே, அதனால் குடிப்பொரு ளன்றுநுஞ் செய்தி கொடித்தேர் நும்மோ ரன்ன வேந்தர்க்கு

மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே.

சிலவே சொல்லிப் பலவே செய்தல்

வயலைக் கொடியின் வாடிய 'மருங்குல் உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே. ஏணியுஞ் சீப்பு மாற்றி

மாண்வினை யானையு மணிகளைந் தனவே.

அறவையோ மறவையோ ஆகுக மன்னே!

783. இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ திருந்தரை நோன்வெளில் வருந்த வொற்றி நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த்

1. மருங்கின்.

2

தலமரல் யானை யுருமென முழங்கவும்

பாலில் குழவி யலறவு மகளிர்

பூவில் வறுந்தலை முடிப்பவு நீரில்

வினைபுனை நல்லி லினைகூஉக் கேட்பவும்

இன்னா தம்ம வீண்டினி திருத்தல்

துன்னருந் துப்பின் வயமான் றோன்றல்

அறவை யாயி னினதெனத் திறத்தல் மறவை யாயிற் போரொடு திறத்தல் அறவையு மறவையு மல்லை யாகத் திறவா தடைத்த திண்ணிலைக் கதவின் நீண்மதி லொருசிறை யொடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே.

2. துலமரல்.