உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வேண்டுமே! இந்நிலையில்தான் தனித் தனி தேர்ந்து பாடல்களை அடைவு செய்யும் திருப்பணியைத் தேர்ந்த புலவர்கள் சிலரிடத்தே புலவர்களும் புரவலர்களும் ஒப்படைத்தனர். திரட்டித் தொகுத்த பணி, புலவர் புரவலர் ஆகிய அனைவர் பொதுப்பணி. அதனை நூல் அடைவு செய்தது தனிப் புலவர் தனிப் புரவலர் பணி.

661

இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர். இத்தொகை நாடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பெற்றது

99

“2இத்தொகை ஒன்பதடிச் சிறுமையாகப் பன்னிரண்டடி காறும் உயரப்பெற்றது; இத்தொகை தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வ

“3இத்தொகைப் பாட்டிற் கடியளவு சிறுமை பதின்மூன்று; பெருமை முப்பத்தொன்று. தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தான் மதுரை உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான்”

664

தாகை தொகுத்தார் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; இத்தொகை தொகுப்பித்தார் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறையார்'

665

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே" (தொல். பொருள் 3). என்புழிச் சொல்லாத முறையாற் சொல்லவும் படுமென்றலின் இத் தொகையைப் பாலை குறிஞ்சி முல்லை நெய்தலென இம்முறையே கோத்தார் நல்ந்துவனார்”

இக்குறிப்புக்களால் நாம் மேலே கண்ட செய்திகள் விளக்கமாம்.

66

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்

மெய்ந்நிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு

1. குறுந்தொகை 4. ஐங்குறுநூறு

2. நற்றிணை 5. கலித்தொகை

3. அகநானூறு