உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

13

என்னும் வெண்பாவால் கீழ்க்கணக்கு நூல்கள் இவை என அறியலாம். கீழ்க் கணக்கின் தன்மை,

66

அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி

அறம்பொருள் இன்பம் அடக்கி அவ்வத் திறப்பட உரைப்பது கீழ்க்கணக் காகும்”

என்னும் பன்னிரு பாட்டியல் நூற்பாவால் விளங்கும்.

கீழ்க்கணக்கில் முதலாவதாகச் சுட்டப் பெறுவது நாலடியார். சமண முனிவர் பலரால் பாடப்பெற்ற நாலடிப் பாடல்களில் சிறந்தனவாம் நானூற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்ததே நாலடி நானூறாம். இக் கருத்தைப் புலப்படுத்துவதே பாண்டியன் அவைக் கண் இருந்த எண்ணாயிரம் சமணப் புலவர்களும் தனித்தனி ஒரு வெண்பா இயற்றி வைத்துச் செல்லச், சினங்கொண்ட பாண்டியன் வையையில் அள்ளி எறியஏவ, நானூறு ஏடுகள் நீரை எதிர்த்து நாலடித் தொலைவு சென்றதாகவும் அவற்றை எடுத்துத் தொகுத்த தாகவும் கூறப்பெறும் கதை என்க.

நாலடியாரைத் தொகுத்து அதிகார அடைவு செய்தவர் பதுமனார் என்பது, “வளங்கெழு திருவொடு' எனத் தொடங்கும் அகவற்பாவின்,

66

“ வெண்பா வியலெண் ணாயிர மிவற்றுட்

பாரெதிர் கொண்டு பரவி யேத்த நீரெதிர் வந்து நிரையணி பெற்ற மேனூற் றகையின்விதிமுறை பிழையாஅ நானூற் றவற்றி னயந்தெரிந் தோதிய மதுமலர்த் தண்டார்ப் பதுமன் தெரிந்த ஐயமில் பொருண்மை யதிகா ரந்தாக மெய்யா நலத்த எண்ணைந்

தென்னும் அடிகளால் தெளிவாகும்.

நாலடியை அடுத்து நிற்கும் நூல்களை யெல்லாம் தொகைப் படுத்துதற்கு முன்னோடி ஐங்குறுநூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து எனின் சாலும். ஏறத்தாழத் தனித் தனி நூல் போன்றவற்றைத் தொகுத்தனவே இத்தொகை நூல்கள். இவ்வாறே நான்மணிக்