உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கடிகை முதலாய நூல்களைத் திரட்டிப் பதினெட்டாகத் தொகைப் படுத்தினர். அதன் பெயரே பதினெண்கீழ்க் கணக்காயிற்று. கணக்கு எனினும் நூலெனினும் ஒக்கும். முதற்கண் இலக்கண நூலையே குறித்த கணக்கு, நாளடைவில் இலக்கிய நூலையும் குறிப்பதாக விரிந்தது. இவை கீழ்க்கணக்கெனின் மேற்கண்ட - இவற்றின் முந்திய - பாட்டு தொகையாம் பதினெட்டு நூல்களை எப்பெயரிட்டு அழைப்பது? அவற்றை 'மேற்கணக்கு' என்று வழங்கியது இலக்கிய உலகம்!

66

“வனப்பியல் தானே” என்னும் நூற்பாவின்கண், “தாய பவனுவலோ டென்றது அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றற்கு இலக்கணஞ் சொல்லுப (போன்று) வேறிடையிடை அவையன்றியுந் தாய்ச் செல்வதென்றவாறு; அஃதாவது பதினெண் கீழ்க்கணக்கென வுணர்க,” என்னும் பேராசிரியர் உரையானும், “தாயபனுவலின் என்பது அறம் பொருள் இன்பமென்னும் மூன்றற்கும் இலக்கணம் கூறுவன போன்றும் இடையிடையே அன்றாகியும் தாவிச்செல்வ தென்றவாறு. அங்ஙனம் வந்தது பதினெண் கீழ்க்கணக்கு” என்னும் நச்சினார்க்கினியர் உரையானும் கீழ்க்கணக்கு என்னும் வழக்கின் பழைமை அறியலாம்.

இவ்விருசார் 36 நூல்களின் தொகுப்பையும் நோக்கப் பாடல் களைத் திரட்டித் தொகுக்கும் தொகையும் நூல்களைத் திரட்டித் தொகைப்படுத்தும் தொகையும் உளவாதல் தெளிவு. இம் முறையில் நூலால் தொகைப்படுத்தப் பெற்றனவே ஐம்பெருங் காப்பியங் களும், ஐஞ்சிறு காப்பியங்களுமாம்.

இனி, வேறொரு வகைத்தொகை நூல்கள் உருவாகின. ஒருவரே வெவ்வேறு இடங்களில் காலங்களில் பாடிய பதிகங்கள் நூல்கள் இவற்றின் தொகைகளாம். இவ்வகையில் எழுந்தவை தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலியவைகளாம். இவ்வகையைச் சார்ந்து பின்னாளில் உருவாயவையே திருப்புகழ், திருவருட்பா முதலானவை.

மூவர் முதலிகள் திருத்தலங்கள் தோறும் சென்று பண்ணோடு சைத்துப் பரமனை வாழ்த்திய பத்திப் பாடல்கள் பல்லாயிரம் தில்லை மூவாயிரர் மன்றுள் அடங்கிக் கிடந்தன. இராசராசன் 1. பதிகங்களுக்கு வழிகாட்டி, பதிற்றுப்பத்தும் பத்துப்பாட்டும் என்பது நினைக்கத்தக்கது.