உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

15

வேண்டற்படி, திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் தேடிக்கண்டு திருமுறைப் படுத்தினார். அத் திருமுறைகள் முதற்கண் ஏழாய் அமைந்தன. பின்னர், திருவாசகம் முதலாக வழி வழியே வளர்ந்து “பன்னிரு திருமுறைகள்" ஆயின. இவ்வாறே சித்தாந்த சாத்திரம் பதினான்கெனவும் அடைவு செய்யப்பெற்றன.

பன்னீராழ்வார்களும் பாடிய பைந்தமிழ்ப் பத்திப் பாடல் களைத் திரட்டித் தொகுத்த பெருமான் நாதமுனிகள். அவை ஏறத்தாழ நாலாயிரந் திருப்பாடல்களாக இருத்தலின் “நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்” என அழைக்கப் பெறுவதாயிற்று

ஒரே புலவர் பாடிய பல நூல்களைத் தொகுத்துக் குமர குருபரர் நூற்றிரட்டு, சிவஞான முனிவர் பிரபந்தத் திரட்டு, சிவப்பிரகாசர் பனுவல் திரட்டு, மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடற்றிரட்டு, மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டு, எனத் திரட்டு நூல்கள் உருவாயின.

பல்வேறு புலவர்கள் பாடிய தனிப் பாடல்களைத் தொகுத்துத் தனிப்பாடல் திரட்டுத் தொகுதிகள் உண்டாயின. ஒருவரைப் பற்றியே பல புலவர்கள் பாடிய பாடலைத் திரட்டி “ஊற்றுமலைத் தனிப்பாடற்றிரட்டு” என்பது போன்று ஒருவகைத் தொகை

நூல்களும் உண்டாயின.

பட்டறிவும் பகுத்தறிவும் பெருகப் பெருகப் பல்வேறு திரட்டு நூல்கள் எழும்பின. அவ்வகையிற் சொற்களைத் திரட்டி ஒழுங்கு படுத்திக் காட்டிய நிகண்டு நூல்களை முதலாவதாகக் குறிக்கலாம். அடுத்துச் சொல் அகராதி. பொருளகராதி, தொகையகராதி, தொடை அகராதி, பழமொழி அகராதி, உவமையகராதி, கலைச் சொல் அகராதி, முதலியவற்றையும் விடுகதை, தாலாட்டுப் பாடல், நாட்டுப் பாடல் முதலிய திரட்டுக்களையும் குறிப்பிடலாம்.

ஒரு நூற்குப் பல்வேறுரைகள் உளவாயின் அவற்றை ஒருங்கு கண்டு ஆய்தற்கு வாய்ப்பாகச் செய்த உரைவளம், எல்லாப் பொருளும் இதன்பாலுள என்று கூறுதற்குத் தகச் செய்யப்பெற்ற கலைக்களஞ்சியம் பல்வேறு கட்டுரைத் தொகுதிகள் ஆகிய வெல்லாம் இத்திரட்டு வகையைச் சார்ந்தனவே. திரட்டு நூல்