உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வரலாறு மிக விரிவுடையது. அதனைத் திரட்டின் ஒரு தனி நூலாம் என்பது ஒருதலை. ஆகவே இவ்வளவுடன் நிறுத்திப், புறத் திரட்டைப்பற்றிக் காண்போம்.

‘புறத்திரட்டு' ஒரு புதுவகைத் திரட்டு என்பதை முன்னரே கண்டுள்ளோம். அவ்வகைத் திரட்டு நூல்கள் தமிழில் தோன்றுதற்கு அமைந்த முன்னோடி அது. ஆக, ஒரு வகைத்திரட்டு நூல்களின் 'தாய்' இப்புறத்திரட்டு என்பது புனைந்துரையன்றாம்.

உடற் கூறும், உளக் கூறும் அறிந்து மருந்தூட்டும் மருத்துவன் போலவும், பால் நினைந்தூட்டும் தாய் போலவும் பரிவுடையவர் புறத்திரட்டின் தொகுப்பாசிரியர். “கற்பவை கற்க” என்னும் பெருங்கருத்தால் கடலன்ன பரப்புடைய நூல்களைக் கற்றுத் தக்கவற்றைத் திரட்டிப் பாகாக்கிப் படைப்பது போன்று

படைத்துள்ளார். அப்பாகுண்டு திளைத்தவர்கள் ஒருபாலராக, ஒருபாலர் அத்தகு பாகுநூற் படைப்பிலும் தலைப்பட்டனர். அத்தலையீடே பன்னூற்றிரட்டு, பன்னூற் பாடற்றிரட்டு, சைவ மஞ்சரி முதலியனவும் அகத்தியர் தேவாரத்திரட்டு, திருவருட்பாப் பெருந்திரட்டு, பெருந்திரட்டு, குறுந்திரட்டு ஆகிய பல்வேறு தொகை நூல்களுமாம். புறத்திரட்டினால் விளைந்த நலங்களுள் இஃதொன்றாம்!

ஆராய்ச்சித்துறை அறிஞர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் அருமுயற்சியால் உருவாகிச் சென்னைப் பல்கலைக்கழக வெளி யீடாக 1939இல் முதுற்கண் வந்தது புறத்திரட்டு. அப்பதிப்பின் அருமையும், அழகும் அப்பதிப்பை மேலோட்ட மாகப் பார்ப்ப வர்க்கும் புலப்படுதல் ஒருதலை. அப்பதிப்பே இப்பதிப்பிற்கு நிலைக்களம் என்பது வெளிப்படை.

அப்பதிப்பு வெளிப்பட்ட காலத்தினும் இக்காலத்தில் எத்துணையோ நூல்கள் வெளியிடப் பெற்றள்ளன. அரிய திருத்தங்கள் பல்வேறு ஆசிரியர்களால் செய்யப்பெற்றுள்ளன. பல்வேறு ஆராய்ச்சிகள் நிகழ்த்தப் பெற்றுள்ளன. பாடல்களின் அடைவு முறைகள் முதலியவற்றிலும் திருத்தங்கள் செய்யப் பெற்றுள்ளன. இவ்வனைத்தும் இப்பதிப்பில் பொன்னேபோற்