உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

17

போற்றிக் கொள்ளப் பெற்றுள்ளன. இப்பதிப்பில் ஒப்பு நோக்கு தற்குப் பயன்படுத்தப் பெற்றுள்ள நூற்பட்டி தனியே இணைக்கப் பெற்றுள்ள தறிக.

முன்னைப் பதிப்பில் புறத்திரட்டில் இல்லாததும், புறத்திரட்டுச் சுருக்கத்தில் இடம் பெற்றிருந்ததுமாகிய 'காமத்துப்பால்' என்னும் பகுதி இப்பதிப்பில் நீக்கப் பெற்றுள்ளது. பொருட்பால், ‘வாழ்த்து’டன் முடிவதால் அதன் முடிநிலை அஃதே என்பது வெளிப்படை. மேலும், 'அகத்திரட்டு' என்னும் பெயரால் அடுத்து வெளி வரவிருக்கும் நூலில் அப்பாடற் பகுதி இடம் பெறும். ஆதலால் ஈண்டு ஒதுக்கி வைக்கப் பெற்றதாம்.

தனி நூலகத்து இடம் பெறாததும், உரையாசிரியர்களால் புறத்திணை முதலியவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் காட்டப் பெற்றதுமாகிய புறப்பொருட் பாடல்கள் 139 தேர்ந்தெடுத்து, இணைத்துக் காணத்தக்க அதிகாரத் தலைப்போடு பின்னிணைப் பாகச் சேர்க்கப்பெற்றுள்ளது.

ஒவ்வொரு பாடலையும் அச்சிட்ட பல்வேறு நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பெருக வழங்குவதும் தக்கதுமாகிய பாடத்தை மூலத்தில் ஏற்றியும், வேண்டத்தக்க இன்றியமையாத பொருட் பொருத்தமுடைய பாடங்களை மட்டுமே பாடவேறுபாட்டில் வைத்துக் கொண்டு பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

ஒவ்வொரு பாடலின் உட்பொருளையும் உள்ளடக்கியதும், பொருட்டெளிவு ஊட்டுவதுமான ‘ஓரகவல் அடி' ஒவ்வொரு பாடற்றலைப்பிலும் படைத்து வைக்கப் பெற்றுள்ளது.

ஒவ்வோர் அதிகாரத் தலைப்பும், பரிமேலழகர் முதலாய உரையாசிரியர்கள் உரையாலோ, பதிப்பாசிரியர் உரையாலோ விளக்கஞ் செய்யப் பெற்றுள்ளது.

ம்

த்தொகுப்போடு ஒப்பிட்டுப் பல்வேறு பாடல்களைப் பயில விரும்புவார்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும் துணையாமாறு "இதே பெயருடைய அதிகாரங்கள் இன்ன இன்ன நூல்களில் இட டம் பெற்றுள்ளன. இதன் சார்புடைய அதிகாரங்கள் இன்ன இன்ன நூல்களில் இடம் பெற்றுள என்னுங் குறிப்புக்கள் அதிகாரந் தோறும் இடம் பெற்றுள்ளன.