உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

831.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

திகழ்முத்தம் போற்றோன்றுஞ் செம்மற்றே தென்னன் நகைமுத்த வெண்குடையா னாடு.

-முத்தொள்ளாயிரம் 1, 2

களப்போர் மல்கும் காவிரி நாடு

காவ லுழவர் களத்தகத்துப் போரேறி

நாவலோஓ 'வென்றழைக்கு நாளோதை - காவலன்றன் கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு.

-முத்தொள்ளாயிரம் 3

தவம்பொருள் போகம் தங்கிடின் நாடு

832. நற்றவஞ்செய் வார்க்கிடந் தவஞ்செய்வார்க்கு மஃதிடம் நற்பொருள்செய் வார்க்கிடம் பொருள்செய்வார்க்கு மஃதிடம் வெற்றவின்பம் விழைவிப்பான் விண்ணுவந்து வீழ்ந்தென மற்றநாடு வட்டமாக 3வைகுமற்ற நாடரோ.

கற்றவர் தகைமை காட்டும் நெற்கதிர்

833. சொல்லருஞ் சூற்பசம் பாம்பின் றோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் 'காய்த்தவே.

-சீவகசிந்தாமணி 77, 53

கமுகினை ஒக்கும் காய்கதிர்ச் செந்நெல்

834. மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும் பூடு கொண்ட 5பொதும்ப ரொளிவிராய்த் தோடு கொண்டபைங் காய்கதிர்ச் செந்நெலின் காடு கொண்டுள கண்ணக னாடெலாம்.

6

1. வென்றிசைக்கும்

4. காய்த்ததே.

2. வட்டமா.

3. வைகுமற்றை.

5. பொதும்பரொ. டுள்விராய்த்.

6. காய்துவள்.