உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

இளங்குமரனார் தமிழ் வளம் 17

தாவி யழிக்கும் தனித்திறப் பொறிகள்

852. விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொட ரயில்வாள் கற்பொறிகள் பாவையன மாடமடு செந்தீக்

கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில்செய் கூகை நற்றலைகள் திருக்கும்வலி நெருக்குமர நிலையே.

உமிழ்ந்து தாக்கி உயிரைப் போக்குவ

853. செம்புருகு வெங்களிக ளுமிழ்வதிரிந் தெங்கும் வெம்புருகு வட்டுமிழ்வ வெந்நெய்முகந் துமிழ்வ அம்புமிழ்வ 'கல்லுமிழ்வ வேலுமிழ்வ வாகித் தம்புலன்க ளால்யவனர் தாட்படுத்த பொறியே.

பன்றியாய்க் குரங்காய்ப் பாயும் பொறிகள் 854. கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடம் குரங்குபொரு தகரினொடு கூர்ந்தரிவ நுண்ணூல் பரந்தபசும்பொற்கொடிப தாகையொடு 'கொழிக்குந் திருந்துமதில் தெவ்வர்தலை பனிப்பத்திருந் தின்றே. மதிலாங் கன்னியின் மாண்பு சொற்றது

855. வயிரவரை கண்விழிப்ப போன்றுமழை யுகளும் வயிரமணித் தாழ்க்கதவின் வாயின்முகமாக வயிரமணி ஞாயின்முலை வான்பொற்கொடிக் கூந்தல் வயிரக்கிடங் காடைமதிற் கன்னியது கவினே.

-சீவகசிந்தாமணி 101, 102, 103, 104, 105

கதிர்ச்செல வொழிக்கக் கதிர்த்தெழு புரிசை

856. செஞ்சுடர்க் கடவுட் டிண்டே ரிவுளிகால் திவள வூன்று மஞ்சுடை மகர நெற்றி 'வானுழு வாயில் மாடத்

தஞ்சுட ரிஞ்சி யாங்கோ ரகழணிந் 'திருந்த தோற்றம் வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே.

-சூளாமணி 38

1. வேலுமிழ்வ கல்லுமிழ்வ

2. கொட்குந்.

3. வானுழை.

4. தலர்ந்த.