உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஒள்ளியர் உணர்வென ஓங்கிய மாமதில்

857. நால்வகைச் சதுரம் விதிமுறை நாட்டி

858.

நனிதவ வுயர்ந்தன 'மதிதோய் மால்வரைக் குலத்தில் யாவையு மில்லை யாதலா லுவமைமற் றில்லை

2நூல்வகைத் தொடர்ந்து பயத்தொடும் பழகி நுணங்கிய நுவலரு முணர்வே

போல்வரைத் தல்லா லுயர்வினோ டுயர்ந்த தென்னலாம் பொன்மதி னிலையே.

செங்கோல் வேந்தை ஒப்பது சீர்மதில்

கோலிடை யுலக மளத்தலிற் பகைஞர் முடித்தலை கோடலின் மனுவின்

3நூடிடை நடக்குஞ் 4செவ்வையின் யார்க்கு நோக்கருங் காவலின் வலியின் வேலொடு வாள்விற் 'பயிறலின் வெய்ய சூழ்ச்சியின் வெலற்கரு °நலத்திற் சால்புடை யுயர்விற் சக்கர நடத்துந்

தன்மையிற் றலைவரொத் துளதே.

ஈசனை ஒக்கும் இணையிலா அரணம்

859. மேவரு முணர்வு முடிவிலா மையினால் வேதமு மொக்கும் விண்புகலால் தேவரு மொக்கும் முனிவரு மொக்குந் திண்பொறி யடக்கிய செயலால் காவலிற் கலையூர் கன்னியை யொக்குஞ் சூலத்தாற் காளியை யொக்கும் யாவரு மொக்கும் பெருமையா லெய்தற் கருமையா லீசனை யொக்கும்.

283

-இராம். பால. 101, 104, 102

1. பனிதோய். 5. பயிற்றலின்.

2. நூல்வரைத். 6. வலத்திற்

3. நூல்நெறி.

4. செவ்வியின்.

7. மேவர வுணர்வு.

8. யாவையு