உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

863.

புறத்திரட்டு

உறந்தை வளமை உணரக் கூறியது மாலை விலைபகர்வார் கிள்ளிக் களைந்தபூச் சால மிகுவதோர் 'தன்மைத்தால் - காலையே விற்பயில் வானகம் போலுமே வேல்வளவன் பொற்பா ருறந்தை யகம்.

கூடற் சிறப்பைக் குறித்துக் காட்டியது 864. மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட குங்கும வீர்ஞ்சாந்தின் சேறிழுக்கி - எங்குந் தடுமாற லாகிய தன்மைத்தே தென்னன் நெடுமாடக் கூட லகம்.

285

-முத்தொள்ளாயிரம் 111,65,9

கடலினும் கச்சி கலிவளம் மிக்கது

865. மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்முள் ஒலியும் பெருமையு மொக்கும் - மலிதேரான் கச்சி படுவ கடல்படா கச்சி

கடல்படுவ வெல்லாம் படும்.

-யாப்பருங்கலம் 61, உரைமேற்.

வாடா வளமை மாடக்கூடல்

866. உலக மொருநிறையாத் தானோர் நிறையாப் புலவர் புலக்கோலாற் றூக்க - உலகனைத்துந் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக் கூட னகர்.

-பரிபாடல் திரட்டு 6

மழலையும் யாழும் மலிந்த மாடம்

867. நிழலகந் தவழ்ந்துதே ’னிமிர்ந்து தாதுசேர் பொழிலகம் பூவையுங் கிளியும் பாடுமே

1. தன்மைத்தாய்க்.

குழலகங் குடைந்துவண் டுறங்குங் கோதையர் மழலையும் யாழுமே மலிந்த மாடமே.

2. னகர்.

3. னிரந்து.