உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

868.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

ஞாலத் தாமரைப் பொகுட்டன சுரமை

சங்கமேய் தரங்க வேலைத் தடங்கடற் பொய்கை பூத்த அங்கண்மா ஞால மென்னுந் தாமரை யகத்து ளாங்கே செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும் நங்கையோர் படிவங் கொண்ட நலத்தது நகர மன்றே.

மலையொடும் இகலும் மாட மாளிகை

869. அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும் முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும் துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும் இகலின மலையொடு மாட மென்பவே.

-(FOTIT LOGO Of 10, 37, 41

பல்கலை முரற்சியும் பல்கு மாநகர்

870. மாடவாய் மணிமுழ விசையு மங்கையர் ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும்

பாடுவார் பாணியும் பயின்று பல்கல

மூடிமா நகரது முரல்வ தொத்ததே.

செங்கதிர் தடவும் ஒண்கொடி அரணம்

871. திருவ நீணகர்ச் செம்பொனி னீடிய உருவ வொண்கொடி யூழி னுடங்குவ பரவை வெங்கதிர்ச் செல்வன பன்மயிர்ப் புரவி பொங்கழ லாற்றுவ போன்றவே.

கடலே நகராய்க் கவிந்தாற் போன்றது

872. எறிசுற விளையவ ரேந்து பூங்கொடி மறிதிரை 'வரைபுரை மாட மாக்கலம் பெறலருந் திருவனா ரமுதம் பேரொலி அறைகடல் வளநக ராய தென்பவே.

1. மலைபுரை.

-சூளாமணி 43