உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

மாட மணிக்குடம் மயிற்குழாம் மானும் 873. பாத்தரும் பசும்பொனின் மாடத் துச்சிமேல் தூத்திரள் மணிக்குடம் நிரைத்துத் தோன்றுவ பூத்தன வேங்கைமேற் பொலிந்து கார்நினைந் தேத்தரு மயிற்குழா 'மிருந்த போன்றவே.

287

-சீவகசிந்தாமணி 126, 1446, 87

கோழியின் எழாத பேரூர் மதுரை

874. மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையுஞ் சீரூர் பூவின் இதழகத் தனைய தெருவ மிதழகத் தரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில் தாதி னனையர் தண்டமிழ்க் குடிகள் தாதுண், பறவை யனையர் பரிசில் வாழ்நர் பூவினுட் பிறந்தோ 2னாவினுட் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப ஏம வின்றுயி லெழுத லல்லதை வாழிய வஞ்சியுங் கோழியும் போலக்

கோழியி னெழாதெம் பேரூர் துயிலே.

-பரிபாடல்திரட்டு 7

குன்றம் உளவரை குன்றா மதுரை

875. "தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம் நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது

குன்றுத லுண்டோ மதுரை கொடித்தேரான் குன்றமுண் டாகு மளவு.

வையை யுளவரை பொய்யா மதுரை

876. செய்யாட் கிழைத்த திலகம்போற் சீர்க்கொப்ப வையம் விளங்கிப் புகழ்பூத்த லல்லது

பொய்யாத லுண்டோ மதுரை புனைதேரான் வையையுண் டாகு மளவு.

1. மிருத்தல்.

2. னாவினிற்.

3. தன்றமிழ்.