உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மொழியுள வரையும் அழியா மதுரை

877. கார்த்திகைக் காதிற் கனமகர குண்டலம்போற் சீர்த்து விளங்கித் திருப்பூத்த லல்லது

878.

'கோர்த்தையுண் டாமோ மதுரை கொடித்தேரான் வார்த்தையுண் டாகு மளவு.

சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும்

ஈவாரைக் கொண்டாடி யேற்பாரைப் பார்த்துவக்குஞ் சேய்மாடக் கூடலுஞ் செவ்வேள் பரங்குன்றும் வாழ்வாரே வாழ்வா ரெனப்படுவார் மற்றையார் போவாரார் புத்தே ளுலகு.

-பரிபாடல் திரட்டு 8, 9, 10, 11

81. பொருள் செயல்வகை

(“பொருள் தேடுமாறும் அதனால் பயன் கொள்ளுமாறும் கூறுதல் - மணக்.

இ.பெ.அ: திருக். 76

இ.சா.அ: பழமொழி 21, 22 (பொருள், பொருளைப் போற்றுதல்) நீதிக். பொருளுடைமை.)

நடுவண தெய்தின் இருதலையு மெய்தும்

879. வடுவிலா வையத்து மன்னிய மூன்றின் நடுவண தெய்த விருதலையு மெய்தும் நடுவண தெய்தாதா னெய்தும் உலைப்பெய் தடுவது போலுந் துயர்.

-நாலடியார் 114

பொலியும் எல்லாம் பொருளிற் பிறக்கும்

880. கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி சொல்லிற் பிறக்கு முயர்மதம் - மெல்லென்

1. கோத்தையுண்.