உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

881.

புறத்திரட்டு

அருளிற் பிறக்கும் அறநெறி யெல்லாம் பொருளிற் பிறந்து விடும்.

289

-நான்மணிக்கடிகை 5

எல்லாம் நல்லவாய் இயலும் பொருளால்

'ஒல்லாதொன் றின்றி யுடையார் கருமங்கள் நல்லவாய் நாடி நடக்குமாம் - இல்லார்க் கிடரா யியலு மிலங்குநீர்ச் சேர்ப்ப

கடலுள்ளுங் காண்பவே நன்கு.

அயிரை விட்டு வராலைக் கவர்தல்

882. சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையாற் பெரிய பொருள்கருது வாரே - விரிபூ விராஅம் புனலூர வேண்டயிரை யிட்டு வராஅஅல் வாங்கு பவர்.

பருவம் அறிந்து வரிகளைப் பெறுக

883. பொருத்த மழியாத பூந்தண்டார் மன்னர் அருத்தமடிநிழ லாரை – வருத்தாது

3

கொண்டாரும் போலாது கோட லதுவன்றோ வண்டூதா துண்டு விடல்.

கறப்பவர் போல இறைமுறை பெறுக

884. பாற்பட்டு வாழ்வ ரெனினுங் குடிகள்மேல் மேற்பட்ட கூட்டு 'மிகைநிற்றல் வேண்டாவே 5கோற்றலை யாயினுங் கொண்டீக காணுங்காற் பாற்றலைப் °பாலூற லில்.

பழமொழி 197, 372, 244, 245

1. ஒல்லாத வின்றி.

2. மிலராகிப்.

3. 621600 h.

4. மிக நிற்றல்.

5. கோற்றலையே.

6. பாலுற.