உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

885.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அரிதே எனினும் அணித்தே நன்று எனைப்பலவே யாயினுஞ் 'சேய்த்தாப் பெறலிற் றினைத்துணையே யானு 'மணிக்கொண்ட னன்றே இனக்கலை தேன்கிழிக்கு மேகல்சூழ் வெற்ப பனைப்பதித் துண்ணார் பழம்.

பின்னைக் குரியதை முன்னைத் தேடுக

886. தந்தம் பொருளுந் தமர்கள் வளமையும் முந்துற நாடிப் புறந்தர லோம்புக அந்த ணருவி மலைநாட சேணோக்கி நந்துநீர் கொண்டதே போன்று.

புலிக்குப் புதர்வலி; புதர்க்குப் புலிவலி

887. உடையதனைக் காப்பா னுடையா னதுவே உடையானைக் காப்பதூஉ மாகும் - அடையிற் புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதலும் வலியாய் விடும்.

888.

889.

கலச்சோற் றுக்குக் காக்கையோ காவல்?

ஊக்கி "யுழந்தொருவ ரீட்டிய வொண்பொருளை நோக்குமி ‘னென்றுவந்து நொவ்வியார் கைவிடுதல் 5போக்கில்நீர் தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப காக்கையைக் காப்பிட்ட சோறு.

வெண்ணெய் வைத்து மயிலைப் பிடித்தல்

முன்னை யுடையது காவா திகழ்ந்திருந்து

பின்னையஃதாராய்ந்து கொள்குறுதல் - இன்னியற்கை மைத்தடங்கண் மாதரா யஃதாலவ் வெண்ணெய்மேல் வைத்து மயில்கொள்ளு மாறு.

1. சேய்த்தாற்.

2. மணிக்கோட

3. யுழன்றொருவ.

4. னென்றிகழ்ந்து.

5. போக்குநீர் தூக்கும் பொருகடற்.