உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

895.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

துன்னும் பொருளால் துன்னா தவையில்

பொன்னி னாகு பொருபடை யப்படை தன்னி னாகுந் தரணி தரணியிற்

'பின்ன ராகும் பெரும்பொரு ளப்பொருள்

துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே.

-சீவகசிந்தாமணி 497, 1923

எல்லாம் ஆக்க வல்லது பொருளே

896. வென்றி யாக்கலு மேதக வாக்கலும் குன்றி னார்தமைக் குன்றென வாக்கலும் அன்றி யுங்கல்வி யோடழ காக்கலும் ழ

பொன்றுஞ் சாகத்தி னாய்பொருள் செய்யுமே.

-சீவகசிந்தாமணி 1922

பொருளைப் பெற்றிடின் புன்கண் ணில்லை

897. குலந்தருங் கல்வி கொணர்ந்து முடிக்கும் அலந்த கிளைக ளழிபசி தீர்க்கும்

நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்

புலம்பில் பொருடரப் புன்கண்மை யுண்டோ.

-வளையாபதி 47

82. படைமாட்சி

(“அரசன் நல்வழியில் ஈட்டிய பொருளைக் கொண்டு அமைப்பதும் அவனாட்சிக்கும் பகைவரினின்று நாட்டைக் காத்தற்கும் இன்றியமையாததுமான படையின் சிறப்பு" - பாவாணர். இ. பெ.அ: திருக். 77.

இ.சா.அ: பழமொழி. 29. (படைவீரர்))

1. பின்னை யாகும்.

2. னார்களை.