உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

படையறின் ஆள்வோர் பாங்கெலாம் அற்றிடும் 898. 'போரறின் வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த 2வேரறின் வாடு மரமெல்லாம் - நீர்பாய்

899.

900.

மடையறின் நீணெய்தல் வாடும் படையறின் மன்னர்சீர் வாடி விடும்.

293

-நான்மணிக்கடிகை 42

மண்ணின் மூத்த மறக்குடி மாண்பு

பொய்யகல நாளும் 3புகழ்விளைத்த லென்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலி நீர் - கையகலக் கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி.

-புறப்பொருள் வெண்பாமாலை 35

வேற்படை வீரம் விளங்க உரைத்தது

மின்னார் சினஞ்சொரிவேல் மீளிக் கடற்றானை யொன்னார் நடுங்க வுலாய்நிமிரின் - என்னாங்கொல் ஆழித்தேர் வெல்புரவி யண்ணல் மதயானைப் பாழித்தோள் மன்னர் படை.

வீரர் தொழிலை விரித்துச் சொன்னது

901. தமருட் டலையாதல் தார்தாங்கி நிற்றல் எமருள்யா மின்னமென் றெண்ணல் - 4 அமருள் முடுகழலின் முந்துறுதல் முல்லைத்தார் வேந்தன் தொடுகழல் மைந்தர் தொழில்.

-புறப்பொருள் வெண்பாமாலை 131, 41 ஆயிரம் பேரையும் அலைக்கும் உரவோன்

902. மறுமனத்தா னல்லாத மாநலத்த வேந்தன் உறுமனத்தா னாகி யொழுகின் - தெறுமனத்தார் பாயிரங் கூறிப் படைதொக்கா லென்செய்ப ஆயிரங் காக்கைக்கோர் கல்.

1. போரன்றி.

2. வேரன்றி.

3. புகழ்விளைத. 4. அமரின்.