உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஆக்கம் பெற்றும் போக்கும் புல்லியார் 989. தாமேயு மின்புறார் தக்கார்க்கு நன்றாற்றார் 'ஏமஞ்சால் நன்னெறியுஞ் சேர்கலார் - தாமயங்கி ஆக்கத்துட் டூங்கி யவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவி னார்.

கடுகள வேனும் கருதுக அறநெறி

990. வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போதும் மறுமை மனத்தரே யாகி - மறுமையை ஐந்தை யனைத்தானு மாற்றிய காலத்துச் சிந்தியார் சிற்றறிவி னார்.

பலரொடு பழகும் பான்மை எய்துக

991. உளநாள் சிலவா லுயிர்க்கேம மின்றால் பலர்மன்னுந் தூற்றும் பழியாற் – பலருள்ளுங் கண்டாரோ டெல்லா நகாஅ தெவனொருவன் தண்டித் தனிப்பகை கோள்.

பேய்ச்சுரைக் காய்க்குப் போருமோ கசப்பு? 992. இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினு மென்றும் அடங்காதா ரென்று மடங்கார் -

தடங்கண்ணாய் உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய்.

தன்னைத்தான் புகழ்வோன் மன்னிய பித்தன்

993. கற்றவுங் கண்ணகன்ற சாயலு மிற்பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்துந் தானுரைப்பின் மைத்துனர் பல்கி மருந்திற் றணியாத பித்தனென் றெள்ளப் படும்.

313

-நாலடியார் 328, 327, 329, 324, 116, 340

1. ஏமஞ்சார்.

2. போழ்தும்.