உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

நனிநிற்பச் செய்தவர் நண்பெலாந் தீர்க்கத் தனிமரங் 'காடாவ தில்.

315

- பழமொழி 286

புல்லியர் பகையால் பொருந்துதல் கேடே

998. வன்பாட் டவர்பகை கொள்ளினு மேலாயார் புன்பாட் டவர்பகை கோடல் பயமின்றே கண்பாட்ட பூங்காவிக் கானலந் தண்சேர்ப்ப வெண்பாட்டம் வெள்ளந் தரும்.

காலம் வந்தால் கால்கொளும் பகைமை

999. தழங்குகுரல் வானத்துத் தண்பெயல் பெற்றாற் கிழங்குடைய வெல்லா முளைக்குமோ ராற்றான் விழைந்தவரை 'வேறன்றிக் கொண்டொழுகல் வேண்டா பழம்பகை ’நட்பாத லில்.

கல்லை மோதிக் கையும் வெல்லுமோ?

1000. அமர்நின்ற போழ்தின்க ணாற்றுவ ரேனும் 4நிகரொன்றின் மேல்விடுத லேதம் - நிகரின்றி வில்லொடுநே ரொத்த புருவத்தா யஃதன்றோ கல்லொடு கையெறியு மாறு.

கூற்றின் முதுகைக் கொட்டினார் இல்லை

1001. ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க போற்றாது கொண்டரக்கன் போரு ளகப்பட்டான் நோற்ற பெருமை யுடையாருங் கூற்றம் புறங்கொம்மை கொட்டினா ரில்.

பின்னே நலிப்பதாய்ப் பேசுதல் பேதைமை

1002. முன்னலிந் தாற்ற முரண்கொண் டெழுந்தாரைப் பின்னலிது மென்றுரைத்தல் பேதைமையே - பின்னின்று காம்பன்ன தோளி 'கலங்கக் கடித்தோடும்

பாம்பின்பற் கொள்வாரோ வில்.

1. காடாத லில்.

2. வேர்சுற்றக். 3. நட்பாவதில்.

4. நிகரன்றி.

5. கடிதிற்