உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அறுத்ததை மிதித்தே அழுக நீர்விடல்

1003. பொருந்தா தவரைப் பொருதட்ட கண்ணும் இருந்தமையா ராகி யிறப்ப வெகுடல் விரிந்தருவி வீழ்தரும் வெற்ப வதுவே அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு.

பழமொழி 300, 296, 317, 291,287, 299

நெற்பயிர் பேணப் புற்பயிர் ஒழியும்

1004. உற்றதற் கெல்லா முரஞ்செய்ய வேண்டுமோ கற்றறிந்தார் தம்மை வெகுளாமற் காப்பதே நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை தற்செய்யத் தானே கெடும்.

கல்லைக் கிள்ளிக் கையும் உய்யுமோ?

1005. மிக்குடைய ராகி மிகமதிக்கப் பட்டாரை ஒற்கப் படமுயறு மென்ற லிழுக்காகும் நற்கெளி தாகி விடினும் நளிவரைமேற் கற்கிள்ளிக் கையுய்ந்தா ரில்.

பகையை மற்றோர் பகையால் அழிக்க

1006. இயற்பகை வெல்குறுவா னேமாப்ப முன்னே அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தாற் கறுவழங்கிக் கைக்கெளிதாச் செய்க வதுவே சிறுகுரங்கின் கையாற் றுழா.

குடிநலம் நினையின் குறையும் குறையிலை

1007. நிரம்ப நிரையத்தைக் கண்டந் நிரையம் வரம்பில் பெரியானும் புக்கான் - இரங்கார் கொடியார மார்ப குடிகெட வந்தால்

'அடிகெடமன் றாடி விடல்.

பழமொழி 53, 48, 306, 288

1. அடிகெட மன்றி.