உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

நெடும்பகை யுள்ளம் நிலைபெற நில்லா

1016. பகைவ ருள்ளமும் பாம்பின் படர்ச்சியும்

வகைசெய் மேகலை மங்கையர் நெஞ்சமும் மிகைசெல் மேகத்து 'மின்னுஞ்செந் நில்லல புகையும் வேலினீர் போற்றுபு சென்மினே.

319

சீவகசிந்தாமணி 1891, 1892, 1816

92. பெரியாரைப் பிழையாமை

("அறிவாலும் ஆற்றலாலும் பெரியாரை இகழ்ந்து தவறு

செய்யாமை’

-

பாவாணர்.

இ.பெ.அ: திருக். 90. நாலடி. 17.)

தலைவன் முன்பிறர் தருவதோ ஆணை?

1017. மன்னவ னாணைக்கீழ் மற்றையர் மீக்கூற்றம் என்ன வகையாற் செயப்பெறுப - புன்னைப் பரப்புநீர் தோஅம் படுகடற்றண் சேர்ப்ப மரத்தின்கீ ழாகா மரம்.

பழமொழி 251

வேந்தன் சினப்பினும் வெஞ்சினம் கொள்ளேல் 1018. வெஞ்சின மன்னவன் வேண்டாத செய்யினும் 3நெஞ்சத்துக் கொள்வ சிறிதுஞ் செயல்வேண்டா என்செய் தகப்பட்டக் கண்ணு 'மெடுப்புவவோ துஞ்சு புலியைத் துயில்.

தம்மைக் காவார் தலைவனைக் காய்வதென்?

1019. தாமேயுந் தம்மைப் புறந்தர வாற்றாதார்

வாமான்றேர் மன்னரைக் காய்வ தெவன்கொலோ ஆமா வுகளு மணிவரை வெற்பகேள்

ஏமாரார் கோங்கேறி னார்.

1. மின்னலு.

2. தாவும்.

3. நெஞ்சகத்துக். 4. மெழுப்புபவோ.