உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

இளங்குமரனார் தமிழ் வளம் 17

தலைவன் விரும்புவ தாமும் விரும்பேல்

1020. இடுகுடைத்தேர் மன்ன ரெமக்கமையு மென்று கடிதவர் காதலிப்பத் தாங்காதல் கொண்டு முடிய வெனைத்து முணரா முயறல்

கடிய கனைத்து விடல்.

எள்ளி இகழ்தல் இன்னலைப் பெருக்கும்

1021. உரைத்தவர் நாவோ பருந்தெறியா தென்று சிலைத்தெழுந்து செம்மாப் பவரே - மலைத்தால் இழைத்த திறவா தவரைக் கனற்றிப் பலிப்புறத் துண்ப ருணா.

எருக்கு மறைந்து யானையை எறிசெயல் 1022. எல்லாத் திறத்து மிறப்பப் பெரியாரைக் கல்லாத் 'துணையார் கயப்பித்தல் - சொல்லின் 2நிறைந்தார் வளையினா யஃதா லெருக்கு மறைந்தியானை 3காய்த்தி விடல்.

பழமொழி 281,282,276, 295, 62

புலியின் முன்னர்ப் புல்வாய் போகுமோ?

1023. தீயன வல்ல செயினுந் திறல்வேந்தன்

காய்வன செய்தொழுகார் கற்றறிந்தார் - 4காயும் புலிமுன்னர்ப் புல்வாய்க்குப் போக்கி லதுவே வலிமுன்னர் வைப்பார மில்.

பிழைப்பே பெருகிற் பொறுப்பார் எவரே?

1024. முன்னு மொருகால் பிழைப்பானை யாற்றவும் பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ - இன்னிசை யாழின்வண் டார்க்கும் புனலூர ஈனுமோ வாழை 'யிருகாற் குலை.

1. துணையார்தாம் கைப்பித்தல். 2. அறைந்தார்.

3. பாய்ச்சி.

4. பாயும்.

5. பலகாற்.