உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பொறுப்ப ரென்று வெறுப்பன செய்யேல் 1030. பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின் ஆர்க்கு மருவீ யணிமலை நன்னாட 'பேர்த்தரல் யார்க்கு மரிது.

பெரியர் பகைப்பின் அரணம் என்செயும்?

1031. விரிநிற நாகம் விடருள தேனும்

உருமின் கடுஞ்சினம் சேணின்று முட்கும் அருமை யுடைய வரண்சேர்ந்து முய்யார் பெருமை யுடையார் செறின்.

பெரியோர் புகழிகழ் பேணிக் கொள்க

1032. அவமதிப்பு மான்ற மதிப்பு மிரண்டு 2மிகன்மக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக் கையறியா மாக்க ளிழிப்பு மெடுத்தேத்தும் வையார் வடித்தநூ லார்.

பெரியர் மதிக்கும் பெருமையே பெருமை 1033. எம்மை யறிந்திலி ரெம்போல்வா ரில்லென்று தம்மைத்தாங் கொள்வது கோளன்று - தம்மை அரியரா நோக்கி யறனறியுஞ் சான்றோர் பெரியராக் கொள்வது கோள்.

அரிய பெரியரால் ஆம்பயன் கொள்க

1034. பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக் கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ பயமில் பொழுதாக் 3கழிப்பரே நல்ல

நயமி லறிவி னவர்.

-நாலடியார் 161, 164, 168, 165, 162

1. பேர்க்குதல்.

2. மிகைமக்க.

3. கழிப்பவே.