உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

94. கள்ளுண்ணாமை

6

329

(“கள் உண்டலைத் தவிர வேண்டும் என்று கூறுதல்” - மணக். கள் என்பது மயக்கும் வெறியும் ஊட்டித் தன்னறிவை மறைக்கச் செய்யும் அனைத்துக் குடி வகைக்கும் பொதுமை கருதிய பெயர்.

இ. பெ.அ: திருக். 93. ப.பா.தி. 61

இ.சா.அ: நீதிக். 18. (குடியாமை))

கண்டதே உண்டதாய்க் களிப்பான் களியன்

1061. மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார் பேணா துரைக்கு முரைகேட் டுவந்ததுபோல் ஊணார்ந் துதவுவதொன் றில்லெனினுங் கள்ளினைக் காணாக் களிக்குங் களி.

களியன் குடிமை உளபோன் றொழியும்

-பழமொழி 99

1062. கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ் விளைவின்கட் போற்றா னுழவும் - இளையனாய்க் கள்ளுண்டு வாழ்வான் குடிமையு மிம்மூன்றும் 'உள்ளபோன் றில்லாப் பொருள்.

ஒளியும் செயலும் ஒழியும் களியால்

1063. ஒளியு மொளிசான்ற செய்கையுஞ் சான்றோர்

-திரிகடுகம் 59

தெளிவுடைய னென்றுரைக்குந் தேசுங் - களியென்னுங் கட்டுரையாற் 2கோது படுமே லிவையெல்லாம் விட்டொழியும் வேறாய் விரைந்து.

-அறநெறிச்சாரம் 86

1. உள்ளன போலக் கெடும்.

2. கோதப். 1064. இப்பாடல் சிந்தாமணிப் பதிப்புக்களில் காணப்பெறவில்லை.