உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

இளங்குமரனார் தமிழ் வளம் 17

எள்ளுதற் காகு கள்ளுணல் விடுக

1064. உள்ளமொழி செய்கைகளி 'னொன்றியுல கேத்துந் தள்ளரிய தன்மைவழி நிற்றலுறு நல்லீர் எள்ளுநர்கள் தன்மையிது நிற்கவிடர் செய்யு கள்ளுமுணல் குற்றங் கடைப்பிடிமி னென்றான்.

சீவகசிந்தாமணி

நன்னெறி யுணர்வோர் நறவுண் ணார்காண்

1065. மாலைப் பந்து மாலையு மேந்தி மதுவார்பூஞ்

சோலைம் மஞ்ஞைச் சூழ்வளை யார்தோள் விளையாடி ஞாலங் காக்கு மன்னவ ராவார் நறவுண்ணாச் சீலங் காக்குஞ் சிற்றுப கார முடையாரே.

-சீவகசிந்தாமணி 2928

நறவுண் மயக்கம் நவையெலாம் நல்கும்

1066. தன்னைத்தா னுணரத் தீரும்

தகையது பிறவி யென்ப

தென்னத்தா மறையு மற்றைத்

துறைகளு மிசைப்ப தெல்லா

முன்னைத்தான் றன்னை யோரான்

2முடையெழு மழுக்கின் மேலே

பின்னைத்தான் பெறுவ தம்மா

நறவுண்டு திகைக்கும் பித்தே.

அனைத்தும் மறைத்திடும் அருந்திய கள்ளே

1067. செற்றதும் பகைஞர் நட்டார் செய்தபே ருதவி தானுங் கற்றதுங் கண்கூ டாகக் கண்டதுங் 3கரையி னூலிற் சொற்றதும் பாவம் தொடர்ந்ததும் படர்ந்த துன்ப முற்றது முணர்வ ராயி னுறுதிவே றிதனி னுண்டோ.

இராமாவ. கிட்கி.665, 667

1. னொன்றுமுல.

2. முழுப்பிணி யழுக்கின்.

3. கலைவலாளர்.