உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

இளங்குமரனார் தமிழ் வளம் 17

நன்மை வேண்டார் நண்ணுக சூதை

1071. புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல் 'கலமயக்கம் கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து பொய்மயக்கஞ் சூதின்கட் டங்குத லிம்மூன்றும் நன்மையி லாளர் தொழில்.

தக்கோர் புரியத் தகாதது சூது

1072. உருவழிக்கு முண்மை நலனழிக்கும் வண்மைத் திருவழிக்கு மானஞ் சிதைக்கும் - ஒருவ ரொருவரோ டன்பழிக்கு மொன்றலாச் சூது பொருவரோ தக்கார் புரிந்து.

வஞ்சமும் போரும் வளர்ப்பது சூது

1073. முன்னர் விளையாடி முட்டுவார் முட்டினால் தன்மை திரிந்து சலந்தோன்றும் - பின்னர் மிகாதோ வெகுளி வெகுண்டாலச் சூது தகாதோ தகுவதோ தான்.

கேட்டின் வித்தாய்க் கிளர்வது சூது

-திரிகடுகம் 39

1074. பிறன்றாரம் வேட்டல் பிழைப்பிலார்ச் சீறல் அறன்கேட 2னாயமே சூழ்தல் - 3மறந்தேயுந் தீநிலத்தார் சொற்கேட்டல் தீச்சூ திவைகண்டாய் மேனிலத்தார் கேட்டுக்கு வித்து.

சூதை விரும்புவோன் மேதை எனப்படான்

1075. ஓதலு மோதி யுணர்தலுஞ் சான்றோரால் மேதை யெனப்படு மேன்மையுஞ் - சூது பொருமென்னுஞ் சொல்லினாற் புல்லப் படுமேல் இருளா மொருங்கே யிவை.

-பாரதம்

1. கலைமயக்கம்.

2. னாய்மேய.

3. மறந்தோயுந்.

அறநெறிச்சாரம் 87