உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

பேதையர் புகுமிடம் சூதர் கழகம்

1076. சூதர் கழக மரவ மறாக்களம்

பேதைக ளல்லார் புகாஅர் 'புகுபவேல்

ஏதம் பலவுந் தரும்.

333

-ஆசாரக்கோவை 98

செம்மை சுட்டெரி செந்தீ சூதே

1077. பொய்யொடு மிடைந்தபொரு ளாசையுரு ளாய மைபடு வினைத்துகள் வழங்குநெறி மாயஞ்

2

செய்தபொருள் பெய்தகலஞ் செம்மைசுடு செந்தீக் கைதவ நுனித்தகவ றாடலொழி கென்றான்.

96. குடிப்பிறப்பு

-சீவகசிந்தாமணி 2873

(அறிவாலும் ஒழுக்கத்தாலும் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தாரது

இயல்பு.

இ.பெ.அ : நாலடி. 15. நீதிக். 53.

இ.சா.அ: திருக். 96. ப.பா.தி. 54. (குடிமை))

வழிவரு வார்க்கு வனப்புத் தருபவை

1078. சென்ற புகழ்செல்வ மீக்கூற்றஞ் 3செவ்வனே நின்ற ‘நெறிகல்வி வள்ளன்மை - 5ஒன்றும் அளிவந்தார் பூங்கோதா யாறு மறையின் வழிவந்தார் கண்ணே வனப்பு.

ஒன்றிலாப் போதும் ஒப்புர வாற்றுவார்

1079. ஈட்டிய வொண்பொரு ளில்லெனினு மொப்புர °வாற்றுங் குடிப்பிறந்த சான்றவர் - ஆற்றவும் போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும் ஏற்றுக்கன் றேறாய் விடும்.

1. புகுவவேல். 4. நிறைகல்வி.

2. வினைக்கண மயங்குநெறி. 3. சேவகம்.

5. 6T GOT MILD.

6. வாற்று மனைப்பிறந்த.

-ஏலாதி 1