உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

இளங்குமரனார் தமிழ் வளம் 17

புலப்புலப் புட்போல் குலக்குல மக்கள் 1080. ஒரு மொருவ ரொருவர்தம் முள்ளத்தைத் தேருந் திறமரிதாற் 'றேமொழீஇ - ஆருங் குலக்குல வண்ணத்த ராகுப வாங்கே புலப்புல வண்ணத்த புள்.

பழமொழி 81, 146

வேளாண் குடியின் விழுப்பச் செய்கை

1081. கழகத்தான் வந்த பொருள்கா முறாமை பழகினும் பார்ப்பாரைத் தீப்போ லொழுகல் உழவின்கட் காமுற்று வாழ்தலிம் மூன்றும் அழகென்ப வேளாண் குடிக்கு.

குடிமா சிலார்க்குக் குறித்தன மூன்று

T

திரிகடுகம் 42

1082. கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை நள்ளிருளுங் கைவிடார் நட்டொழுகல் - தெள்ளி வடுவான வாராமற் காத்தலிம் மூன்றுங் குடிமாசி லார்க்கே யுள.

குலைந்த போதும் குடிமை தாழேல்

1083. அலந்தார்க்கொன் றீந்த புகழுந் துளங்கினுந் தங்குடிமை குன்றாத் தகைமையும் – அன்போடி நாணாளும் நட்டார்ப் பெருக்கலு மிம்மூன்றுங் கேள்வியு ளெல்லாந் தலை.

குடிப்பிறப் பாளர் குன்றா ஒழுக்கம்

-திரிகடுகம் 77, 41

1084. இருக்கை யெழலு மெதிர்செலவு மேனை விடுப்ப வொழிதலோ டின்ன - குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ டொன்றா வுணரற்பாற் றன்று.

1. றேமொழி.