உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஊதிய மாவது உயர்குடிப் பிறப்பே

1085. நல்லவை செய்யி னியல்பாகுந் தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும் - எல்லாம் உணருங் குடிப்பிறப்பி னூதிய மென்னோ புணரு மொருவற் கெனின்.

குடிப்பிறப் பாளர் குன்றார் வறுமையில்

1086. ஒருபுடை பாம்பு கொளினு மொருபுடை

அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போற் செல்லாமை செவ்வனேர் நிற்பினு மொப்புரவிற் கொல்கார் குடிப்பிறந் தார்.

இற்பிறந் தாருக் கிருக்கும் பண்புகள்

1087. இனநன்மை யின்சொலொன் றீதல்மற் றேனை மனநன்மை யென்றிவை யெல்லாங் - கனமணி முத்தோ டிமைக்கு முழங்குவரித் தண்சேர்ப்ப இற்பிறந்தார் கண்ணே யுள.

335

-நாலடியார் 143, 144, 148, 146

சிதைந்த வுரையார் முதிர்ந்த மேலோர்

1088. கடித்துக் கரும்பினைக் கண்டகர நூறி இடித்துநீர் கொள்ளினு மின்சுவைத்தே யாகும். வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் - குடிப்பிறந்தார் 'கூறார்தம் வாயிற் சிதைந்து.

மாணாக் குடிக்கு மண்டும் அச்சம்

1089. கல்லாமை யச்சங் கயவர் தொழிலச்சம் சொல்லாமை யுள்ளுமோ சோர்வச்சம் - எல்லாம் இரப்பார்ககொன் றீயாமை யச்ச மரத்தாரிம்

[ மாணாக் குடிப்பிறந் தார்.

1. சொல்லார்தம்.

-நாலடியார் 156, 145