உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

இளங்குமரனார் தமிழ் வளம் 17

97. மானம்

(எந்நாளும் தம் நிலைமையில் தாழாமையும் யாதானும் ஒரு காரணத்தால் ஒருகால் தாழ்வு வருமாயின் உயிர் வாழாமையும்

ஆம்.

இ.பெ.அ: திருக். 97. நாலடி. 30. ப.பா.தி. 48 நீதிக். 59)

இம்மையும் உம்மையும் இனிதாம் மானம்

1090. 'இம்மையு நன்றா வியனெறியுங் கைவிடா தும்மையும் நல்ல பயத்தலால் - செம்மையின் நானங் கமழுங் கதுப்பினாய் நன்றேகாண் மான முடையார் மதிப்பு.

திறனிலார் செய்கை தீப்போற் கனற்றும் 1091. திருமதுகை யாகத் திறனில்லார் செய்யும் பெருமிதங் கண்டக் கீகடைத்தும் - எரிமண்டிக் கானந் தலைக்கொண்ட தீப்போற் கனலுமே மான முடையார் மனம்.

புறங்கடை வைப்பார் புல்லுற வொழிக்க 1092. யாமாயி னெம்மில்லங் காட்டுதுந் தாமாயிற் காணவே கற்பழியு மென்பார்போல் - நாணிப் புறங்கடை வைத்தீவர் சோறு மதனான்

மறந்தீக செல்வர் தொடர்பு.

-நாலடியார் 294, 291, 293

எள்ளும் சிறுநோக் கெரிபோல் வெதுப்பும்

1093. நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தா ரென்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்காற் - கொல்லன் 4உலையூதுந் தீயேபோ லுள்கனலுங் கொல்லோ தலையாய சான்றோர் மனம்.

1. இம்மையுநன் றாய.

2. கடைத்தே. 3. பெரிதெளியார். 4. உலையூது.