உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கொள்ளாருட் கொள்ளாத கூறாமை யிம்மூன்றும்

'நல்லாள் வழங்கு நெறி.

திரிகடுகம் 26,68,82

சான்றோர் சான்றோர் பால ராப

1126. பொன்னுந் துகிரு முத்து மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்

இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்

தருவிலை நன்கல மமைக்குங் காலை

ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர் சான்றோர் பால ராப

சாலார் சாலார் பாலரா குபவே.

எவ்வழி ஆடவர் அவ்வழி நிலமே

1127. நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவ ராடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே.

100. பண்புடைமை

-புறநானூறு 218

புறநானூறு 187

("பெருமை சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்றே எல்லார் இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல்' - பரிமே.

இ.பெ.அ: திருக். 100. நீதிக். 54.)

பூவும் நாரும் பொருந்திய தன்மை

1128. பெரிய குடிப்பிறந் தாருந் தமக்குச் சிறியா ரினமா வொழுகல் - வெறியிலை வேலொடு நேரொக்குங் கண்ணா 'யஃதன்றோ பூவொடு நாரியைக்கு மாறு.

1. நல்லார்.

2. தொடைபுனைந்.

3. யதுவன்றோ.