உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ் வளம் 17

புறத்திரட்டில் அறநெறிச்சாரப் பாடல்கள் (34) முப்பத்துனான்கு டம்பெற்றுள்ளன. அப்பாக்களின் எண்கள்

20, 39, 51, 52, 75, 85, 86, 116, 127, 128, 129, 168, 182, 189, 212, 213, 214, 251,258, 287, 320, 321, 375, 395, 433, 460, 525,526, 527, 622, 655, 1063, 1075, 1208.

2. ஆசாரக்கோவை

ஒன்று.

அறங்கூறும் நூல்களுள் ஆசாரக்கோவையும் ஆசாரமாவது உலகியல் அறிந்து நடக்கும் ஒழுகலாறு ஆம். ஆசாரங்களை எடுத்துரைப்பது குறித்தே இந்நூல் ‘ஆசாரக்கோவை’ எனப் பெயர் பெற்றது.

இந்நூலாசிரியர் பெருவாயின் முள்ளியார் என்பதும், வண்கயத்தூர் என்னும் ஊரினர் என்பதும், பெருவாயில் என்னும் ஊரில் வாழ்ந்தவர் என்பதும், சைவசமயஞ் சார்ந்தவர் என்பதும், ஆரிடம் என்னும் வடநூற் பொருளைத் தமிழில் ஆசாரக்கோவை யாகத் தந்தவர் என்பதும்,

66

ஆரெயில் மூன்று மழித்தான் அடியேத்தி

ஆரிடத்துத் தானறிந்த மாத்திரையான் ஆசாரம் யாரும் அறிய அறனாய மற்றவற்றை

ஆசாரக் கோவை யெனத் தொகுத்தான் தீராத் திருவாயி லாய திறல்வண் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியென் பான்”

என்னும் சிறப்புப் பாயிரப் பாடலால் புலனாம். இவர் வாழ்ந்த பெருவாயில் புதுக்கோட்டை நாட்டில் குளத்தூர் வட்டத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பர். (புதுக்கோட்டைச் சீமைக் கல்வெட்டுக்கள்: 442, 518,525, 853). இவர் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என்பர்.

"முந்தையோர் கண்ட முறை”, “யாவருங் கண்ட நெறி”, "பேரறிவாளர் துணிவு”, “நல்லறிவாளர் துணிவு” என என இவர் கூறுவதால் சான்றோர் மேலும் ஆசாரத்தின்மேலும் இவர் கொண்டிருந்த ஈடுபாடு தெள்ளிதிற் புலப்படும்.