உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

21

குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா ஆகிய பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டது இந்நூல்.

உண்ணல், உடுத்தல், உறங்கல், நீராடல் ஆகியவை அழகுற எடுத்தோதப்பட்டுள்ளன. செய்யத்தக்கவை இவை, செய்யத்த காதவை இவை, செய்யின் எய்தும் பயன் இது என்றெல்லாம் தெளிவாகவும் சுவையாகவும் இந்நூல் கூறிச் செல்கின்றது. ஆகவே, தொல்காப்பியனார் கூறிய ‘அம்மை’ என்னும் நூல் வகையைச் சார்ந்ததென ஆராய்ந்தோர் கூறுவர்.

புறத்திரட்டில் இந்நூல் பாடல்களாக எடுத்தாளப் பெற்றவை (27) இருபத்தேழு. அவை வருமாறு:

101, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 656, 751, 799, 800, 801, 802, 803, 804, 805, 806, 807, 808, 1076.

3. ஆசிரியமாலை

புறத்திரட்டின் வழியாக அறியப்பெற்ற நூல் இவ்வாசிரிய மாலையாம். இதன் பாடல்கள் புறத்திரட்டில் 16 இடம் பெற்றுள. புறத்திரட்டில் 827ஆம் பாடலாக வரும் "குடிப்பிறப்புடுத்துப் பனுவல் சூடி" என்பது, என்பது, “எட்டுவகை நுதலிய அவையத்தானும்” என்னும் (புறத். 21) புறத்துறைக்கு எடுத்துக் காட்டாக இளம் பூரணரால் தரப்பெறுகின்றது. எனினும் இன்ன நூலைச் சேர்ந்ததென அவர் குறித்தாரல்லர். நூற்பெயரைச் சுட்டியதோடு, மேலும் 15 பாடல்களை வழங்கியது புறத்திரட்டேயாம்.

ஆசிரியமாலையிலிருந்து கிடைத்துள்ள பாடல்களில் சில இராமாயணச் செய்திகளை விளக்குவனவாக அமைந்துள்ளன. நிரைகோடல், கொடுங்கோன்மை, நிலையாமை, தவம், அறன் வலியுறுத்தல் ஆகிய பல பொருள்களை விளக்கும் பாடல்களும் அமைந்துள்ளன. அனைத்தும் ஆசிரியப் பாவான் அமைந்துள்ளன. இவற்றை நோக்கப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் கூறியவாறு, “வெண்பா மாலையினைப் போலவே, ஆசிரியமாலையும்