உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அகவற்பாக்களானியன்ற உதாரணச் செய்யுட்களையுடையதோர் புறப்பொருள் நூலாக இருத்தலுங் கூடும்” சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் மேற்கோள் ஒன்றனை எடுத்துக்காட்டி (8:25) ஆசிரியமாலை 1இசைநூல் என்பர்.

ஆசிரியமாலைச் செய்யுட்களின் நடையொழுக்கு புறநானூற்றை நினைவூட்டுவதாகவும், அதற்கு எவ்வகையானும் தாழாததாகவும் உள்ளமை கண்கூடு.

"மூவிலை நெடுவேல் ஆதிவானவன் இடமருங்கொளிக்கும் மயக்கிழவி.... மூவா மெல்லடித் திருநிழல், வாழி காக்கவிம் மலர்தலையுலகே” என்னும் கடவுள் வாழ்த்துப் பாடலால் (9) ஆசிரியமாலை ஆசிரியர் சிவநெறி சார்ந்தவர் என்பது விளங்கும்.

66

எளிதென இகழாமலும், அரிதென உரைக்காமலும், 'துறைதொறும் துறைதொறும் நோக்கி அறமே நிறுத்துமின் அறிந்திசி னோரே” என்று கூறும் இவர் வாக்கால் (49) இவர்க்குள்ள அறநாட்டத்தின் அழுத்தம் நன்கு புலப்படும்.

66

தவத்தை அரசியலாக்கிக் கூறும் அழகும் (283) அரக்கியர் கண்ணும் இலங்கை அகழும் ஒப்பாம் நிலையை உரைக்கும் அணிநயமும் (1332) நெருநற் செல்வ வாழ்வையும் இன்றை வறுமை வாழ்வையும் (357) படம் பிடித்துக் காட்டும் பான்மையும், கூற்றத்து மீளிக் கொடுநா விலக்குதற் கரிதே" (402) என்று கூறுந் திட்பமும், இருசுடர் வழங்காப் பெருமூ திலங்கை அரக்கர் கோவையும், (1334) பாடுதமிழ் வளர்த்த கூடலின் வடாஅது பல்குடி துவன்றிய கள்ளியம் பெரும்பதிச் சால்புமேந் தோன்றிய தாழி"யையும் (1493) திறமுறப் பாடுஞ் சீர்மையும் பிறவும் அறிதோ றின்பம் பயப்பதாம்.

66

சிரியமாலைச் செய்யுட்களைத் தொகுத்துச் செந்தமிழ் ஐந்தாந் தொகுதியில் முதற்கண் வெளியிட்டுள்ளார் அறிஞர் மு. இராகவ ஐயங்கார். பின்னர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மறைந்த தமிழ் நூல்கள் என்னும் அரிய நூலில் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

1. கலைக்களஞ்சியம் - தொகுதி 1. (ஆசிரியமாலை காண்க.)