உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

23

புறத்திரட்டிலுள்ள ஆசிரியமாலைப் பாடல்கள் (17) பதினேழு. அவை வருமாறு:

9, 49, 283, 357, 369, 392, 402, 679, 827, 846, 1242, 1332, 1333, 1334, 1344, 1369, 1493.

4. இராமாயணம்

ஆதி காவியம்' என்று சொல்லப்படும் இராமாயணம், வான்மீகி முனிவரால் வடமொழியிற் செய்யப்பெற்றது. அக்கதையைத் தழுவித் தமிழ் நெறிக்கு ஏற்பப் பெருங்காவியம் ஆக்கியவர் கம்பராவர்.

66

“வாங்கரும் பாத நான்கும்" என்னும் பாடலால் வான்மீகி முனிவர் செய்த வரலாற்றைத் தாம் தமிழில் செய்ததாகக் கம்பர் கூறியுள்ளார்.

66

ராமாயணத்திற்கு இராமகாதை என்னும் பெயரையே கம்பர் இட்டார் என்ப. “ஆதவன் புதல்வன்” என்னும் தனியனும் (5) “எண்ணிய சகாத்தம்” என்னும் தனியனும் (8) இராமகாதை என்றே குறிப்பிடுகின்றன. புறத்திரட்டுத் தொகுத்த ஆசிரியர் ராமாவதாரம் என்னும் பெயரைக் கையாண்டுள்ளார். இதற்கு இராமாவ தாரப்பேர்த் தொடை நிரம்பிய தோமறு மாக்கதை என்னும் கம்பர் வாக்கு தக்க சான்றாம். இனி, இராமன் கதை என்னும் பெயரும் இதற்கு உண்டென்பது “காசில் கொற்றத்து இராமன் கதையரோ” என்னும் அவையடக்கத்தால் (பாயிரம். 7) அறியப்பெறும். ஆனால் பெருக வழங்கும் வழக்கம் கொண்டு இப்பதிப்பில் இராமாயணம் என்றே குறிக்கப் பெற்றுள்ளது.

66

எண்ணிய சகாத்தம் எண்ணுற்றேழின் மேல் பங்குனி அத்தத்தில் திருவரங்கர் முன்னிலையில் இராமாயணம் அரங்கேறியதை எண்ணிய சகாத்தம்” என்னும் தனியன் (8) கூறுகிறது. மூன்றாங் குலோத்துங்கன் காலத்தவர் கம்பர் என்றும், அக்காலம் 12ஆம் நூற்றாண்டின் இறுதி என்றும் திரு.மு. இராகவையங்கார் தம் ‘சாசனத்தமிழ்க்கவி சரித'த்தில் கூறுகிறார். இதே கருத்து திரு இரா. இராகவையங்காராலும் வலியுறுத்தப் பெற்றுள்ளது. (செந்தமிழ் - தொகுதி 2).

-