உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வரலாற்றுப் பேரறிஞர் சதாசிவ பண்டாரத்தார், உத்தம சோழன் ஆட்சிக் காலத்தில் இருந்தவர் கம்பர் என்பார். உத்தம சோழன் காலம் கி.பி. 970 - 985 என்பது அறியத்தக்கது.

கம்பரை ஆதரித்த வள்ளல் சடையப்பர் என்பதும் ஆயிரத்திற்கு ஒரு பாடலில் அவரைப் புகழ்ந்தார் என்பதும் நாடறிந்த செய்தி.

கம்பர் தந்தையார் ஆதித்தர் என்றும், திருவழுந்தூரினர் என்றும், கம்பர் பகலெல்லாம் பல புலவர்களோடு ஆராய்ந்து ரவெல்லாம் இராமாயணம் பாடினார் என்றும், அப்படிப் பாடியது ஒரு நாளுக்கு எழுநூறு பாடல்கள் என்றும், நாட்டரசன் கோட்டையில் அவர் சமாதி உண்டென்றும் பல்வேறு செய்திகள் பாடல்களாலும் வழக்காலும் அறியப் பெறுகின்றன.

“கல்வியிற் பெரியவர் கம்பர்”, “கம்ப நாடன் கவிதையிற் போற் கற்றோர்க்கிதயம் களியாதே”, “கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்” என்னும் மொழிகள், கம்பர் சிறப்பை உணர்த்தும்.

கம்பராமாயணம் ஆறு காண்டமாகும். ஆனால் ஒட்டக் கூத்தர் பாடிய உத்தர காண்டத்தையும் சேர்த்து,

66

கரைசெறி காண்ட மேழு கதைகளா யிரத்தெண் ணூறு

பரவுறு சமரம் பத்து படலநூற் றிருபத் தெட்டே

உரைசெயும் விருத்தம் பன்னீ ராயிரத் தொருபத் தாறு

வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற் றாறே"

என்றொரு பாடல் கூறும் செய்தி கருதத்தக்கது.

புறத்திரட்டில் சேர்க்கப்பெற்றுள்ள இராமாயணப் பாடல்கள் (27) இருபத்தேழு. அவை வருமாறு:

14, 16, 17, 18, 27, 97, 229, 332, 610, 678, 725, 743, 744, 745, 839, 840, 841, 842, 843, 857, 858, 859, 860, 1066, 1067, 1068, 1442.