உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

5. இரும்பல் காஞ்சி

25

காஞ்சி என்பது புறத்திணைகளுள் ஒன்று. “உட்கார் எதிரூன்றல் காஞ்சி” என்பது அதன் இலக்கணம். அவ்விலக்கணம் பற்றி மிகுந்த பல செய்திகளைக் கொண்ட நூல் ‘இரும்பல் காஞ்சி' என்னும் பெயர் பெற்றிருத்தல் வேண்டும்.

புறத்திரட்டினால் அறியப்பெறும் நூல்களுள் இஃதொன்று. பரணி யுரையில் இந்நூற்பாடல்கள் இரண்டு

தக்கயாகப்

மேற்கோளாக எடுத்தாளப் பெற்றுள.

66

“ எய்கணை விழுந்துளை யன்றே செவித்துளை

66

மையறு கேள்வி கேளா தோர்க்கே"

பருதிக் கருவின் முட்டைக் கதிர்விடும் பெருங்குறை வாங்கி வலங்கையிற் பூமுத லிருந்த நான்முகத் தனிச்சுடர் வேதம் பாடிய மேதகப் படைத்தன எண்பெரு வேழம்

(கோயிலைப்பாடினது. 53)

(காளிக்குக் கூளி கூறியது. 32)

இரும்பல் காஞ்சிப் பாடல்கள் புறத்திரட்டில் இடம் பெற்றிருத்தலால் அதன் காலம் 15 ஆம் நூற்றாண்டிற்கு முன்னது என்பது உறுதி. அன்றியும் 15ஆம் நூற்றாண்டினதான தக்கயாகப் பரணியில் இரும்பல் காஞ்சிப் பாடல்கள் மேற்கோளாக ஆளப் பெற்றிருப்பதும் இதனை வலியுறுத்தும்.

புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள இரும்பல் காஞ்சிப் பாடல்கள் (3) மூன்று. அவை வருமாறு: 5, 601, 1476.

6. இன்னா நாற்பது

இன்னது இன்னது துன்பம் பயக்கும் என எடுத்தோதிச் செல்லும் நாற்பது இன்னிசை வெண்பாக்களைக் கொண்ட நூல் இன்னா நாற்பதாம். இதன் பெயரை அறியவேநூல்நுவல் பொருளும், பாடல்களின் தொகையும் புலனாம்.