உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ் வளம் 17

இன்னா நாற்பதின் ஆசிரியர் கபிலர் என்பார். இவர் சமயம் சைவம் என்பது,

66

முக்கட் பகவன் அடிதொழா தார்க்கின்னா

என்னும் கடவுள் வாழ்த்துப் பாடலால் தெளிவாம். இவர் சைவஞ் சார்ந்தவர் எனினும் பிற சமயங்களையும் மதித்துப் போற்றினார் என்பது,

66

பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா

சக்கரத் தானை மறப்பின்னா ஆங்கின்னா

சத்தியான் தாள்தொழா தார்க்கு”

எனப் பலராமனையும், மாயோனையும், முருகனையும் தொடுத்துப் பாடுவது கொண்டு அறியலாம்.

‘துன்ப நீக்கமே இன்ப ஆக்கம்' ஆகலின் உயிர்கள் இன்ப மெய்துதல் வேண்டும் என்னும் பேரருட் பெருக்கத்தால் தாம் ஆய்ந்து ஆய்ந்து கண்ட இன்னாதவைகளை எடுத்துரைத்துச் செல்கிறார். கருதிய கருத்தை அப்படியே கூற வேண்டும் என்னும் ஆசிரியர் ஆர்வநிலையினால் இந்நூற்பாடல்களில் நெறியமைந்த வைப்பு முறை அமையவில்லை எனலாம். எனினும் செவ்விய கருத்துச் செறிவுடன் இலங்குகின்றது இந்நூல்.

366

2

சங்கச் சான்றோராகிய கபிலரும் இவரும் ஒருவர் அல்லர். அவர் பாடலில், 'ஊனுண்டு வியர்த்தலும் 'மட்டுண்டு மகிழ்தலும் உண்டு. இப்புலவர் ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா” எனவும் ““கள்ளுண்பான் கூறும் கருமப் பொருளின்னா எனவும் கூறுவது கொண்டு அவரின் வேறானவர் இவர் எனத் தெளியலாம்.

இனிப், பதினோராந் திருமுறையிலுள்ள மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணி மாலை, சிவபெருமான் திருவந்தாதி ஆகியவற்றைப் பாடிய கபிலதேவ நாயனாரின் இவர் வேறானவர் ஆவர். ஏழாம் நூற்றாண்டில் தோன்றியது விநாயகர் வழிபாடு, விநாயகர் மேல் இவர் இரட்டை மணிமாலை இயற்றியிருப்பதால் சங்கஞ் சார்ந்த 1. புறம் 14

2. புறம். 113.

3. GOT 60TIT. 23

4. 60T 60TIT 34