உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

27

காலத்தில் இருந்த கபிலரும் இவரும் வேறானவர் என்பது தெளிவு. அன்றியும் இவரால் மகேந்திரவர்மப்பல்லவன் காலத்தில் அமைக்கப் பெற்ற திருச்சிராப்பள்ளிச் சிவாலயம் குறிக்கப் பெறுவதும் கபிலதேவ நாயனார் காலத்தாற் பிற்பட்டவர் எனப் போதரும்.

புறத்திரட்டில் வந்துள்ள இன்னா நாற்பதுச் செய்யுட்கள் (5) ஐந்து. அவை வருமாறு: 518, 588, 764, 957, 1070.

7. இனியவை நாற்பது

இனிய பொருள்களை யுரைக்கும் நாற்பது இன்னிசை வெண் பாக்களைக் கொண்ட நூல் இனியவை நாற்பதாம். 'இனியது நாற்பது', 'இனிது நாற்பது', 'இனிய நாற்பது' என்னும் பெயர் களாலும் இந்நூல் வழங்கப்பெறும்.

இனியவை நாற்பதின் ஆசிரியர் “மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்" என்பர். இப்பெயரால் ஆசிரியர் பெயர் சேந்தனார் என்பதும், அவர் தந்தையார் பெயர் பூதன் என்பதும், அப்பூதனார் மதுரைத் தமிழாசிரியர் என்னும் என்னும் சிறப்புப் பெயருடையவர் என்பதும் தெளிவாம்.

பூதன் மகன் சேந்தன் என்பது 'பூதஞ்சேந்தன்' என்று புணரும் என்பதைத் தொல்காப்பியத்தால்' அறியலாம். ஆர் விகுதி சிறப்புப்பற்றி வருவதாம்.

66

"கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே” என்னும் கடவுள் வாழ்த்துத் தொடக்கம் கொண்டு இவரைச் சைவ சமயத்தவர் என்று உறுதி செய்யலாம். பிற சமயங்களையும் மதித்துப் போற்றும் பெருந்தகைமை உடையவர் இவர் என்பதைத், “தொன்மாண்டுழாய் மாலை யானைத் தொழல் இனிதே" எனவும், "முந்துறப் பேணி முகநான் குடையானைச் சென்றமர்ந் தேத்தல் இனிது" எனவும் திருமாலையும் நான்முகனையும் அடுத்து வாழ்த்துவது கொண்டு அறியலாம்.

இன்னா நாற்பது பாடிய கபிலரின் கடவுள் வாழ்த்தையும், இவர் பாடிய கடவுள் வாழ்த்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்து இவர் 1. தொல் - எழுத்து புள்ளி. 55.