உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ் வளம் 17

காலம் கபிலர் காலத்திற்குப் பிந்தியது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்திருத்தல் வேண்டுமென்றும் ஆராய்ச்சிப் பேரறிஞர் 'சதாசிவ பண்டாரத்தார் கூறுவார்.

புறத்திரட்டில் சேர்க்கப்பெற்றுள்ள 'இனியவை நாற்பது' செய்யுட்கள் (2) இரண்டு. அவை வருமாறு: 4, 693.

8. ஏலாதி

ஏலமாவது ஒரு மருந்துப் பொருள். அதனுடன் இலவங்கம், நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு என்னும் ஐந்து பொருள்களையும் சேர்த்துச் ‘சூர்ணமாக்கி உடற்பிணி நீக்குதற்குப் பயன்படுத்துவர். அவ்வாறே, அறியாமைப் பிணியை அகற்றுதற்கு உரிய அரிய கருத்துக்கள் ஆறு ஆறு அடக்கிப் பாடப்பெற்ற பாடல்களால் ஆகிய நூல் ‘ஏலாதி' எனப்பட்டது. ஏலம் + ஆதி து.ஏலம் ஏலாதி. ஏலத்தை

முதலாக உடைய மருந்து போன்றநூல் என்பதாம். இந்நூல் கடவுள் வாழ்த்து, சிறப்புப் பாயிரம் நீங்கலாக எண்பது வெண்பாக்களைத் தன்னகத்துக் கொண்டது.

66

ஏலாதியின் ஆசிரியர் கணிமேதையார் எனப்படுவார். இவர்க்குக் கணிமேதை என்னும் பெயரும் உண்டு என்பது அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியுங், கணிமேதை செய்தான் கலந்து” என்னும் பாயிரத்தால் அறியலாம். 'கணி மேதை'யாவார் சோதிடம் வல்லாராம். கணி என்னும் சிறப்புப்பெயர், நாட் கணிப்பில் வல்ல சோதிடர்க்குத் தொல்பழநாள் தொட்டே வழங்கப் பெற்றதாம். கணியன் பூங்குன்றனார் என்னும் புலமைச் செல்வரைத் தமிழுலகம் நன்கறியும். அறநூல் பாடிய இக் கணிமேதை அகப் பொருள் பாடுதலிலும் தேர்ந்தவர் என்பது அவரால் பாடப்பெற்ற 'திணைமாலை நூற்றைம்பது' என்னும் நூலால் தெளிவாம்.

66

"தமிழாசிரியர் மகனார் மாக்காயனார் மாணாக்கர் கணி மேதையார் செய்த ஏலாதி முற்றிற்று” என்னும் நூலிறுதிக் குறிப்புக்கொண்டு இவர்தம் ஆசிரியர் மாக்காயனார் என்பது விளங்கும். சிறுபஞ்சமூலம் இயற்றிய ஆசிரியர் காரியாசானின் ஆசிரியரும் இம் மாக்காயனாரே என்பது அந்நூற் சிறப்புப் 1. தமிழ் இலக்கிய வரலாறு கி.பி. 250-600. பக். 37.