உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

29

பாயிரத்தால் புலனாம். ஆகக் கணி மேதையாரும், காரியாசானும் ஒருசாலை மாணாக்கர் என்பது போதரும்.

.

சமண் சமய நீதிகள் பலவற்றை இவர் வலியுறுத்திக் கூறுவதால் இவர் சமண் சமயத்தவர் என்பது வெளிப்படை. இவர் வடமொழிப் புலமை பெற்றிருந்தார் என்பதும் வட மொழி வழக்குகள் சிலவற்றை ஏற்றிருந்தார் என்பதும் இவர்நூலால் அறியக்கிடக்கின்றன.

கல்விக் கடப்பாடு அனைத்தும் அரசைச் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்னும் இந்நாட் கருத்து, கணிமேதைக்கு அன்றே தோன்றியுள்ளமை வியப்பானதாம். மாணவர்க்கு ஊண், உடை, எழுத்தாணி, புத்தகம், பேணுதல், கல்வி அனைத்தும் வழங்கவேண்டுகிறார். (ஏலாதி. 63)

புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள ஏலாதிப் பாடல்கள் (21) இருபத்தொன்று. அவை வருமாறு:

60, 61, 100, 107, 192, 193, 194, 274, 275, 420, 429, 430, 445, 511, 543, 544, 727, 753, 767, 1078, 1130.

66

9. களவழிநாற்பது

ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்”

என்னுந் தொல்காப்பிய நெறியில் தோன்றிய நூல் களவழி நாற்பது. களப்போர் குறித்துப் பாடுவது என்பதும், நாற்பது பாடல்களைக் கொண்டது என்பதும் நூற் பெயரால் நன்கு புலப்படும்.

"சோழன் செங்கணானும், சேரமான் கணைக்காலிரும் பொறையும் போர்ப்புறத்துப் பொருதுடைந்துழிச் சேரமான் கணைக்காலிரும்பொறையைப் பற்றிக்கொண்டு சோழன் செங்கணான் சிறைவைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று." என்னும் பழைய உரையா சிரியர் குறிப்பால் இந்நூலாசிரியர் பொய்கையார் என்பதும், சோழன் செங்கணான் மேல் பாடப்பெற்ற தென்பதும், சிறைப்பட்ட சேரமான் கணைக்