உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ் வளம் 17

காலிரும்பொறைக்கு வீடுபேறு அருள வேண்டிப் பாடப் பெற்ற தென்பதும் தெள்ளிதிற் புலப்படும். இச்செய்தியைக் கலிங்கத்துப் பரணி, மூவருலா முதலிய பல நூல்கள் குறித்துச் செல்வதும் கருதத்தக்கதாம்.

இங்குக் குறிக்கப்பெறும் இரும்பொறை பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. 'குழவியிறப்பினும்' எனத் தொடங்கும் அப்பாடற் குறிப்பில், "சேரமான் கணைக்காலிரும் பொறை சோழன் செங்கணானோடு போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற்கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட் குறிக்கப்பெற்றுள்ளமை ஆராயத்தக்கது.

1

எனக்

பொய்கையார் சங்கச் சான்றோர் என்பது ஒருதலை. அவர் அன்புக்கு ஆட்பட்ட இரும்பொறை பாட்டும், பொய்கையார் பாட்டுப் போலவே சங்கநூலில் இடம் பெற்றுள்ளமை இதை வலியுறுத்தும். அன்றியும் சோழன் செங்கணானும் சங்க காலத்தவனே. அவன் மைந்தன் 'நல்லடி'என்பான். அவன் பரணர் பெருந்தகையால் பாராட்டுஞ் சீர்மை பெற்றுள்ளான். ஆகப் பொய்கையார் சங்கச் சான்றோர் என்பதில் ஐயமின்று. பிற்காலப் பொய்கையாழ்வார் இவரின் வேறானவர் என்பது அறியத்தக்கது.

266

கானலந்தொண்டி அஃதெம்மூர்” என்பது இவர் வாக்காத லால் அவ்வூரில் வாழ்ந்தவர் ஆகலாம். இவர்தம் முன்னோர் ‘பொய்கை' என்னும் ஊரினர் ஆகலாம். ‘பொய்கை நாடு' என்பாரும் உளர்.

புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள பாடல்கள் (10) பத்து. அவை வருமாறு:

1419, 1420, 1421, 1422, 1423, 1424, 1425, 1426, 1427, 1428.

1. அகம். 356.

2. புறம். 48.