உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

10. குண்டலகேசி

31

கேசி என்பது கூந்தல் என்னும் பொருளது. இவ்வாறே 'நீலகேசி', 'அஞ்சனகேசி’ முதலிய பெயர்களும் உள. குண்டலம் என்பது சுருள் என்னும் பெயருடையதாய்ச் சுருண்ட கூந்தலை யுடையாளைக் குறித்து அவளது காப்பியத்தைக் குறிப்பதாயிற்று. நீலகேசி முதலியனவும் இவ்வாறு வந்தனவேயாம். நீலமாவது கருமை; அஞ்சனமும் அது.

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாய இந்நூல் தமிழர் தவக்குறையால் கிட்டாது ஒழிந்தது. ஆனால் புறத்திரட்டுத் தொகுத்த நாளிலே பொலிவோடு திகழ்ந்தமையால் அத் திரட்டு நூலாசிரியரால் 19 பாடல்கள் எடுத்தாளப்பெற்றுள. இன்று முழுமையாகக் குண்டல கேசியில் இருந்து நமக்குக் கிட்டியுள்ள பாடல்கள் இப்பத்தொன்பதே என எண்ணும்போது புறத்திரட்டின் அருமை புலனாதல் ஒருதலை.

குண்டலகேசி பௌத்த சமயச் சார்புடைய நூல். சமண் சமயக் கோட்பாடுகளைக் கண்டித்துப் பௌத்த சமயமே உயர்ந்ததென நிலைநாட்டுதற்குத் தோன்றிய நூல். அவ்வாறே ஆவணம் என்னும் நகரத்திலே நாதகுத்தனார் என்பவரை வாதிட்டுக் குண்டலகேசி வென்றனள் என்றும், பிறசமயக் கணக்கர்களையும் வாதிட்டு வென்றனள் என்றும் நீலகேசியால் அறிகிறோம்.

குண்டலகேசியின் செல்வாக்கை ஒழித்தற்கும், அச்சமயக் கோட்பாடுகளைத் தகர்த்து ஆருகத சமயச் செல்வாக்கை உண்டாக்குதற்கும் எழுந்தது நீலகேசியாகலின் அதன்கண் குண்டல கேசியின் வரலாறும் வாதமும் பிறவும் இடம் பெற்றுள்ளன. குண்டலகேசி வாதச் சருக்கம் என ஒரு சருக்கமே நீலகேசியில் அமைந்துள்ளமை குறிக்கத்தக்கது.

66

'குண்டலகேசி என்பாள் ஒரு வணிகப்பெண். கள்வனாகச் சிறைப்பட்டுச் செல்லும் காளன் என்பானைக் கண்டு காதலுற்றாள். பின், தந்தை துணையால் அரசனைக் கண்டு விடுதலை பெற்றுத் திருமணம் செய்து கொண்டாள். ஒருநாள் ஊடல் மிகுதியால் ‘நீ கள்வனல்லனோ' என்று குண்டலகேசி கூற அவன் தன்னுள்ளத்தே