உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ் வளம் 17

சினங்கொண்டு வேறு காரணங்காட்டி ஒரு மலைக்கு அழைத்துச் சென்று, 'யான் உன்னைக் கொல்வேன்' என்றான். 'தற்கொல்லியை முற்கொல்லிய' என்பவாகலின் 'இவனை நான் கொல்வேன்' என எண்ணி, அவனை மும்முறை வலம்வர இசைவு பெற்று, மூன்றா முறையில் கீழே வீழத் தள்ளினாள். அவன் இறந்த பின் கவலை மிக்கவளாய்ப் பல சமயங்களையும் நாவல் நட்டு வாதிட்டு வெற்றி கொண்டாள்" என்பது நீலகேசியால் அறியப்பெறும் செய்தியாம்.

99

குண்டலகேசியின் யாப்பு வகை சிந்தாமணி, சூளாமணி போன்றதே என்பது “சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிருதபதி என்பவற்றின் முதற்பாட்டு வண்ணத்தான் வருவன எ என்னும் யாப்பருங்கல விருத்தியால் அறியப்பெறும். குண்டலகேசியை “அகலக்கவி” என்பார் வீர சோழிய உரைகாரர். (அலங். 4, 13) இதற்குக் 'குண்டலகேசி விருத்தம்' என்னும் பெயருண்டென்பதும் வீரசோழிய உரையால் புலப்படும் (யாப்பு - 21) தேரிகாதை' என்னும் பௌத்த நூலைத் தழுவி இந்நூல் ஆக்கப்பெற்றதென்பர்.

புறத்திரட்டில் எடுத்தாளப் பெற்றுள்ள குண்டலகேசிச் செய்யுளின் எண்கள் (19) பத்தொன்பது. அவை வருமாறு:

7, 13, 205, 288, 302, 303, 388, 389, 390, 391, 410, 411, 412, 413, 494, 495, 551, 723, 724.

11. சாந்தி புராணம்

சாந்தி நாதர் என்பவரது வரலாற்றைக் கூறும் நூல் சாந்தி புராணமாம். சாந்தி நாதராவார் சமண தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் பதினாறாம் தீர்த்தங்கரர் ஆவார். இவர் வரலாற்றைக் கூறும் தமிழ்ச் சமண நூலாகவே சாந்தி புராணம் இருந்திருத்தல் வேண்டும்.

குருபரம்பரையில் அரசனாகப் பிறந்து பேரரசனாக விளங்கித் துறவு பூண்டு பெருநிலை பெற்றுத் தீர்த்தங்கரராய் வாழ்ந்து சமண சமயத்தை நாடெங்கும் பரவச் செய்து பிறவாப் பெருநிலை யுற்றவர் சாந்திநாதர். அவருடைய முன்னைப் பிறப்புக்கள் பதினொன்றையும் பற்றி விரித்து ‘ஸ்ரீ புராணமும்”, “திரி சஷ்டி சலாக புருஷ சரித்திரம்