உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

33

என்னும் நூலும் கூறுகின்றன. இவ்வரலாறே சாந்தி புராணத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்று கொள்ளலாம்.

புறத்திரட்டின் வழியாகவே இந்நூல் இருந்ததை அறிவதால் புறத்திரட்டின் பெருமையை மிகுக்கும் நூல்களுள் இஃதொன்றாம். புறத்திரட்டு வழியாக நமக்குக் கிட்டியுள்ள இந்நூற் பாடல்கள் (8) எட்டு மட்டுமே. அவை வருமாறு:

173, 292, 306, 307, 442, 742, 1057, 1058.

12. சிறுபஞ்சமூலம்

மூலமாவது வேர். ஐந்து சிறிய வேர்கள் என்னும் பொருள் தருவது இச் சொற்றொடர். மருத்துவ நூல்களில் கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர், பெருமல்லி வேர் என்பவை பஞ்சமூலம் எனப் பெறும். அவை, உடற்பிணியைப் போக்குவது போலக் கற்பாரின் அறியாமைப் பிணியைப் போக்கவல்ல ஐந்தைந்து கருத்துக்களைக் கொண்ட பாடல்களால் அமைந்ததாகலின் இந்நூல் 'சிறுபஞ்சமூலம்' எனப் பெயர் பெற்றது. பாயிரச் செய்யுளுடன் சேர்த்து 104 வெண்பாக் களைக் கொண்டுள்ளது.

சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர் காரியாசான் எனப்படுவார். இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் மாணவர் என்பதை, மல்லிவர்தோள் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப் பல்லவர் நோய்நீக்கும் பாங்கினாற் - கல்லா மறுபஞ்சந் தீர்மழைக்கை மாக்காரி யாசான் சிறுபஞ்ச மூலஞ்செய் தான்”

என்னும் பாயிரச் செய்யுளால் அறியலாம். இவரின் ஒரு சாலை மாணவர் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல்களை யாத்த கணிமேதையார் ஆவர். இவர் வளமையான வாழ்வும், வள்ளன்மையும் உடையவர் என்பது மேற்காட்டிய பாடலில் இவர்க்கமைந்துள்ள சிறப்பு அடைகளை நோக்கப்புலனாம். இவர் சமயம் சமணம் என்பது,