உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

66

இளங்குமரனார் தமிழ் வளம் 17

முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம் பழுதின்றி யாற்றப் பணிந்து”

99

நூலுரைக்கப் புகுதலால் தெளிவாகும். வச்சிரநந்தி என்னும் சமண முனிவரால் தோற்றுவிக்கப்பெற்ற தமிழ்ச் சங்கத்தில் தமிழாய்ந்த மாக்காயனார் மாணவர் இவராதலால் இவர் காலம் ஐந்தாம் நூற்றாண்டாகலாம் என்பர்.

1

காரியாசான் கொல்லாமை, பொய்யாமை முதலாய அறங்களை நன்கு வலியுறுத்துகின்றார்; புகழ்பெறும் வழிகள் இவையெனப் புகல்கின்றார்; செந்தமிழ்க் கவியியற்றுவார் சீர்மையைச் செப்பு கின்றார்.

66

நன்னெறியில் ஒழுகுவோர் தோற்கன்றைக்

காட்டிக் கறந்த பசுவின்பாலை உண்ணமாட்டார்”

என்னும் இவருரையால் இவர்தம் அருட் பெருக்கமும் அற நெஞ்சமும் தெள்ளிதிற் புலனாம்.

புறத்திரட்டில் இடம்பெற்றுள்ள சிறுபஞ்ச மூலச் செய்யுட்கள் (37) முப்பத்தேழு. அவை வருமாறு:

37, 55, 56, 57, 58, 59, 76, 81, 144, 145, 190, 195, 206, 207, 248, 270, 286, 311, 327, 328, 434, 477, 478, 508, 509, 510, 608, 620, 641, 642, 728, 752, 847, 908, 1100, 1157, 1158.

13. சீவக சிந்தாமணி

சிந்தாமணி என்பது தன்மையால் வந்த பெயரென்பர் இலக்கண நூலோர். நெஞ்சின்கண் பொதிந்து வைத்தற்குரிய சிறப்புடைய மணிபோல்வது சிந்தாமணியாம். பாட்டுடைத் தலைவனாகிய சீவகனுக்கு அவன் நற்றாய் ஆகிய விசயை முதற்கண் இட்டு அழைத்த பெயர் ‘சிந்தாமணி' என்பதாகலின் ஆசிரியர் சிந்தாமணி என்னும் பெயரைத் தம் நூற்குச் சூட்டினார் என்பதும் தகும்.

1. தமிழ் இலக்கிய வரலாறு கி.பி. 250 - 600. பக். 50. 1. தமிழ்ப் புலவர் அகராதி, ந.சி.க. காரியாசான் காண்க.