உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

35

சமண்சமயச் சான்றோரான திருத்தக்க தேவரால் இந்நூல் சுவை சொட்டச் சொட்ட இயற்றப் பெற்றது. நாமகள் முதலிய மகளிரை மணந்து கொண்டதாகவே நூன் முற்றும் அமைந்திருப்ப தால் இதனை ‘மணநூல்' என்றும் வழங்குவர், நாமகள் இலம்பகம் முதல் முத்தியிலம்பகம் ஈறாகப் பதின்மூன்று இலம்பகங்களையும், 3,145 பாக்களையும் தன்னகத்துக் கொண்டது இந்நூல். ஐம்பெருங் காவியங்களுள் முதற்கண் வைத்து எண்ணப் பெறும் சிறப்பே இந்நூன் மாண்பை நன்கு புலப்படுத்த வல்லதாம்.

"சோழ குலமாகிய கடலிலே பிறந்த வலம்புரி" எனவும் "வண்பெரு வஞ்சிப் பொய்யா மொழிபுகழ் மையறு சீர்த்தித் திருத்தகு முனிவன்" எனவும் நச்சினார்க்கினியர் கூறுவது கொண்டு திருத்தக்கதேவர் சோழர் குடிவழியில் தோன்றியவர் என்பதும், வஞ்சிமாநகர்க்கண் வாழ்ந்த பொய்யாமொழி என்பாரின் பாராட்டுக்கு உரியவராக விளங்கியவர் என்பதும், திருத்தகு முனிவர் என்னும் பெயர்க்கும் உரிமையுடையவர் என்பதும் அறியலாம்.

திருத்தக்கதேவர் “நரிவிருத்தம்' என்னும் நூலொன்றும் செய்துள்ளார். அஃது ஐம்பது விருத்தப்பாக்களைக் கொண்ட நூல். இவர்தம் ஆசிரியர் ஒரு நரியைச் சுட்டிக் காட்டி 'இதனைப் பாடுக' என இவர் பாடினார் என்பர். அதன் பின்னரே ஆசிரியர் சைவுடன் சிந்தாமணி இயற்றியதாகக் கூறுவர். சிந்தாமணி மதுரையில் திகழ்ந்த ஒரு சங்கத்தின்கண் அரங்கேற்றப் பெற்றதென வரலாறுண்டு. இவர் காலம் கி.பி. 900 ஆகலாம் என்றும் அல்லது அதற்குப்பின் ஆகலாம் என்றும் “அறிஞர் கோபிநாதராவ் கூறுவர். உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை இந்நூற்குண்டு. அவர்க்கு முன்னரும் ஓருரை யுண்டென்பது அவருரையால் புலப்படும்.

நாமகள் இலம்பகம் மூலம் மட்டும் 1868இல் ரெவரெண்ட் எச். பவர் என்பவராலும், பின்னர் நாமகள், கோவிந்தையார், காந்தருவ தத்தையார் இலம்பகங்கள் நச்சினார்க்கினியருரை பதவுரைகளுடன் சோடசாவதானம் தி.க. சுப்பராயசெட்டியார்

1. சீவக, 3143

3. செந்தமிழ் வெளியீடாக வெளிவந்துள்ளது.

2. நச். உரைச்சிறப்பு.

4. செந்தமிழ். தொகுதி 5. பக். 95.